நேற்று சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக சதம் அடித்தார். இந்த போட்டிக்கு அவர் தன்னை எப்படி தயார் படுத்திக் கொண்டார்? என்பது குறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே முதல் மூன்று போட்டிகளை தோற்று இருந்தபோது சஞ்சு சாம்சனும் மூன்று கோட்டிகளாக ரன் எடுக்காமல் இருந்தார். இது தனிப்பட்ட முறையில் அவருக்கு பெரிய அழுத்தத்தை உண்டாக்கி இருந்தது. இந்த நிலையில்தான் நான்காவது போட்டியில் சதம் அடித்திருக்கிறார்.
ராஜஸ்தான் தந்த அழுத்தம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் கடைசி கட்டத்தில் சஞ்சு சாம்சனை சரியான முறையில் நடத்தவில்லை என்று தெரிகிறது. அணிக்குள் வைபவ் சூரியவன்சி வந்ததும், ரியான் பராக்கை தொடர்ந்து கேப்டனாக வைத்திருக்கவும் சஞ்சு சாம்சனை வெளியேற்ற வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு உருவாக்கியது.
இந்த நேரத்தில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வந்து சரியாக விளையாட முடியாமல் தடுமாறினார். ஆனால் இந்த தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் ராஜஸ்தான் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இதுவெல்லாம் அவருக்கு தனிப்பட்ட முறையிலான அழுத்தத்தை அதிகரித்து இருந்தது.
ஸ்ரீராம் கூறினார்
இது குறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசும்போது ” இந்த போட்டியில் மைதானத்தில் சிஎஸ்கே பயிற்சியாளர் குழுவில் இடம் பெற்றிருக்கும் ஸ்ரீராமிடம் பேசினேன். அவர் போட்டிக்கு முதல் நாள் முழுமையாக சாம்சன் பயிற்சிக்கு வரவில்லை என்று கூறினார். அதற்கு முந்தைய நாள் 3 மணி நேரம் தொடர் பயிற்சியில் ஈடுபட்டார் என்றும், மேலும் மைதானத்தில் நடு ஆடுகளத்தில் பயிற்சி செய்வதற்கு முன்பாக உள்ளரங்கில் பயிற்சி செய்து வந்தார் என்றும் கூறினார்”
இதையும் படிங்க : ரோகித் மன்னிச்சுக்கோ.. உன்னோட பெருமையை உடைக்கிறேன்.. மும்பை இந்தியன்ஸ் நிலைமை இதுதான் – அஸ்வின் பேச்சு
“உண்மையில் அவர் தன்னை மிகவும் ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டார். எந்தவித பதட்டமும் இல்லாமல் சேப்பாக்கம் ஆடுகளத்திற்கு எப்படி விளையாட வேண்டுமா அப்படி விளையாடினார். அவர் சதத்திற்கு பின்னால் இந்த அணுகுமுறை உள்ளது. தற்போது சேப்பாக்கத்தில் இப்படி ஒரு சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்ததில் அவர் நிம்மதியாக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.






