தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை சார்ந்து இல்லை என்றும், மேலும் அந்த அணியின் தற்போதைய பிரச்சனைகள் என்ன என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. ஆனால் அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளை தோற்றது. பேப்பரில் மும்பை இந்தியன்ஸ் மிகவும் வலிமையான அணியாக காணப்படுகிறது. ஆனால் செயல்பாட்டில் மிகவும் பின்தங்கியுள்ளது.
சிஎஸ்கேவின் நிலைமை
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கீழ் வரிசையில் நிலையாக ரன்கள் கொடுக்கும் வீரர்கள் தேவைப்படுகிறது. மேலும் துவக்க இடத்தில் ஹைதராபாத் பஞ்சாப் போல அதிரடியாக ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
மிக முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால் பெயர்கள் மிகவும் பெரிதாக உள்ளது. ஆனால் அவர்களுடைய பெயருக்கு ஏற்ற வகையில் பந்துவீச்சு சிறப்பாக இல்லை. குறிப்பாக போல்ட் மற்றும் தீபக் இருவரும் ஏமாற்றம் கொடுத்து வருகிறார்கள்.
பெருமையை காயப்படுத்தலாம்
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “மும்பை அணி முழுமையாக ரோகித் சர்மாவை மட்டுமே சார்ந்த இல்லை. மன்னித்துக் கொள்ளுங்கள் ரோகித் இது உங்களுடைய பெருமையை காயப்படுத்தலாம். ஆனால் உண்மை என்னவென்றால் மும்பை ரோகித்தை சார்ந்து இருக்கவில்லை என்பதுதான். அவர்களுக்கு மிகவும் வலுவான பேட்டிங் லைன் அப் இருக்கிறது”
இதையும் படிங்க : போன முறை அண்டர்டன் இந்த முறை ஓவர்டன்னா மாறிட்டார்.. இந்த விஷயத்தை செஞ்சதாலயே சக்சஸ் வந்திருக்கு – ஸ்ரீகாந்த் பாராட்டு
“ஆனால் மும்பை பின்னுக்கு தள்ளி விடுவது அவர்களுடைய பந்துவீச்சு என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக அவர்களுக்கு சுழல் பந்துவீச்சு சிறப்பாக இல்லை. அதேசமயம் பும்ராவுக்கு தேவையான ஆதரவு மற்றவர்களிடமிருந்து பந்துவீச்சில் கிடைக்கவில்லை. இதேபோல் அவர்களுடைய தொடக்க ஓவர்களை வீசும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இதுதான் அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது” என்று கூறி இருக்கிறார்.






