இந்திய அணியில்.. இந்த சிஎஸ்கே வீரருக்கு ஏன் இடம் தராங்க?.. தேவையே இல்ல – பத்ரிநாத் பேச்சு

0
957
Jadeja

இந்த ஆண்டு இந்த மாதம் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட வீரரை தேர்வு செய்திருப்பது தமக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாக இந்திய மற்றும் தமிழக முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறியிருக்கிறார்.

இந்திய அணி தன்னுடைய சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் அனைத்தையும் துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த மாதம் பிப்ரவரி 21ஆம் தேதி துபாய் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. அதைத்தொடர்ந்து தமது பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடுகிறது.

- Advertisement -

வருண் சக்கரவர்த்தியால் ஏற்பட்டிருக்கும் நல்ல பிரச்சனை

தற்போது திடீரென இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வருண் சக்கரவர்த்தி முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்திருப்பதற்கான முக்கிய காரணம் அவரை சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் சேர்த்துக் கொள்வது சரியாக இருக்குமா என்று பரிசோதித்து பார்ப்பதற்காகத்தான்.

நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வருண் சக்கரவர்த்தி சிறப்பான முறையில் விளையாடிய விட்டால், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் யாரை நீக்குவது? என்பது ஒரு முக்கிய கேள்வியாக இருக்கும். இந்த அணியில் ரவீந்திர ஜடேஜா அக்சர் படேல் வாஷிங்டன் சுந்தர் குல்தீப் யாதவ் என நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இதில் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் ஒரே மாதிரிய பந்து வீசக்கூடியவர்கள்.

- Advertisement -

இவரை ஏன் தேர்வு செய்தார்கள்?

இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் அவரது குழுவினர்கள் தேர்வு செய்துள்ள சாம்பியன் டிராபி தேர்வில் இந்திய மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் திருப்தி அடையவில்லை.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை பைனல்.. கிளாசனை அவுட் பண்ண ரோகித் கிட்ட இதத்தான் சொன்னேன் – ஹர்திக் பாண்டியா பேச்சு

இதுகுறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசும்பொழுது “இதில் கொஞ்சம் டிரிக்கியான இடங்கள் இருக்கின்றன. இந்த அணியில் ரவீந்திர ஜடேஜா இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் மிகவும் குறைவாக இருக்கும் பொழுது அணியில் இடம் கிடைத்தது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. அப்படியானால் உண்மையில் விளையாட வாய்ப்பு இல்லாத ஒரு வீரரை எதற்காக அணியில் தேர்வு செய்ய வேண்டும்? இதுதான் டிரிக்கியான விஷயமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -