டி20 உலக கோப்பை பைனல்.. கிளாசனை அவுட் பண்ண ரோகித் கிட்ட இதத்தான் சொன்னேன் – ஹர்திக் பாண்டியா பேச்சு

0
399
Hardik

2024 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 உலக கோப்பை தொடரில் ஹென்றி கிளாசன் விக்கெட்டை கைப்பற்றியது குறித்து அப்போது இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.

ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியதும், அந்த வெற்றியில் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்காற்றியதும் அவருக்கு மிக முக்கியமான வரலாறாகவும் மீள் எழுச்சியாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியால் வந்த பின்னடைவு

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றிகரமாக கேப்டனாக இருந்த பொழுதும் ஹர்திக் பாண்டியா டிரேடிங் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்வதற்கு முடிவெடுத்தார். ஆனால் அங்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டனாக பொறுப்பேற்றார்.

இதன் காரணமாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இரண்டாவது முறையில் விளையாடும் முன்பாகவே பெரிய விமர்சனங்களை சந்தித்தார். மேலும் போட்டிகளில் தொடர் தோல்விகள் வந்ததால் அவருக்கு சொந்த ரசிகர்களால் கடுமையான எதிர்ப்பு மைதானத்திலேயே தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த நேரத்தில் அவருடைய தனிப்பட்ட வாழ்விலும் சில பிரச்சனைகள் இருந்தது. ஒட்டுமொத்தமாக அந்த நேரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். இப்படியான சூழலில் அவர் டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது மிகப்பெரிய மறு எழுச்சியாக அமைந்தது.

- Advertisement -

ரோகித் இடம் இதையே சொன்னேன்

இது குறித்து பேசி இருக்கும் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது ” நாங்கள் ஒரு அணியாகவே சேர்ந்து வெற்றி பெற்றோம். ஆனால் இப்படியான ஒரு போட்டியில் முக்கிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அந்த கனவு அந்த போட்டியில் நனவாக மாறியது. அது எனக்கு மிகப்பெரிய நிம்மதியாக அமைந்தது. நான் செயல்பட்ட விதம் குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். நான் உணர்ச்சிகளை வெளிக்காட்ட வில்லை அல்லது எனக்கு நடந்தவைகள் குறித்து நான் பேசவில்லை”

“நான் கிளாசனை ஆட்டம் இழக்க செய்வதற்கு முன்பு நான் ரோகித் சர்மாவிடம் மெதுவாக பந்து ஒன்றை வீசப் போவதாக கூறினேன். அவர் ஸ்டெம்புக்கு நேராக வீசப்படும் பந்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்கு தெரியும். அவர் கால்கள் லெக் நோக்கி இருந்தது. அதனால் அவர் எங்கு என்னை அடிக்கப் போகிறார் என்பதும் எனக்கு தெரியும். நான் அந்த பந்தை வீசுவதற்கு செல்லும்பொழுது மெதுவாக வீசப்போகிறேன் என்று சொன்னேன். ஏனென்றால் நான் மெதுவான பந்தை வீசுவதற்கு ஃபீல்ட் செட்டப் செய்யவில்லை”

இதையும் படிங்க : முத்தரப்பு கிரிக்கெட் தொடர்.. தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. தமிழக வீரர் உள்பட 6 புது வீரர்களுக்கு வாய்ப்பு

“நான் அவரை அவுட் பாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்படி செய்யும் பட்சத்தில் தான் அவருக்கு என்ன மாதிரியான பந்து வரும் என்பது குறித்து தெரியாது. மேலும் பந்தை அடிக்கும் விதம் பிரம்மாண்டமாக இருந்தது. அப்படி அவர் சென்றதுதான் எங்களுக்கு கதவுகளை திறந்து விட்டது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -