தற்போது ரவீந்திர ஜடேஜா சஞ்சு சாம்சனை விட வேல்யூ குறைவானவர் எனவும், அதனால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் சிஎஸ்கே அணியிடம் கூடுதல் வீரர்களை கேட்க வேண்டும் என சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறியிருக்கிறார்.
சுப்பிரமணியம் பத்ரிநாத் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்கு விளையாடிய வீரராகவும், தற்போது ஆதரவாளராகவும் இருக்கக் கூடியவர். அவரே இப்படிப்பட்ட கருத்தை கூறி இருக்கின்ற காரணத்தினால் இது பரபரப்பானதாக மாறியிருக்கிறது.
ஜடேஜா மதிப்பு குறைவானவர்
இதுகுறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசும்பொழுது ” முதலில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அனுப்பி கொடுப்பதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் சம்மதிக்கிறதா? என்று நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் தற்போது ஜடேஜா சாம்சனை விட மிகவும் மதிப்பு குறைவான வீரராக இருக்கிறார். நான் ராஜஸ்தான் அணியில் இருந்தால் ஜடேஜா உடன் சேர்த்து இன்னொரு வீரரையும் கேட்பேன்”
“ஜடேஜா என்றும் சரிவில்தான் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். ஆனால் சாம்சன் இடம் இன்னும் சிறந்த கிரிக்கெட் மீதம் இருக்கிறது. நான் ராஜஸ்தான் அணியில் இருந்து ஜடேஜாவை வாங்கினாலும் கூட, சிஎஸ்கே அணியிடமிருந்து டிவால்ட் பிரிவிஸ் வேண்டும் என்று கேட்பேன்”
தோனியின் முடிவு என்ன?
“தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா கூட்டணி சிஎஸ்கே அணிக்காக நிறைய செய்திருக்கிறது. எனவே தோனி இந்த விஷயத்தில் என்ன நினைக்கிறார்? என்பது மிகவும் முக்கியமானது. ஜடேஜா சிஎஸ்கே அணிக்காக நிறைய விஷயங்களை செய்திருக்கிறார். எனவே அவரை விட்டுக் கொடுப்பதற்கு முன்பாக ஒரு முறை அல்ல 100 முறைக்கு மேல் நிச்சயம் சிஎஸ்கே அணி நிர்வாகம் யோசித்திருக்கும்”
இதையும் படிங்க : கடைசி ODI ரோகித் சதம் அடிச்சார்.. ஆனா தொடர தோற்றோம்.. அதை என்னால கொண்டாட முடியாது – கம்பீர் பேச்சு
“உண்மையில் ரவீந்திர ஜடேஜாவை உருவாக்கியவர் தோனிதான். இன்று ஜடேஜா இருக்கும் நிலைக்கு அவரை வழி நடத்திக் கொண்டு வந்தவர் தோனிதான். எனவே அவரை விட்டுக் கொடுப்பது என்பது நீண்ட விவாதங்களை உள்ளடக்கிய கடினமான ஒரு முடிவாகவே இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.






