இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தொடர் தோல்வியை தாண்டி ஒரு தனிப்பட்ட வீரரின் செயல் திறனை கொண்டாட முடியாது என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இன்று பேட்டி அளித்துள்ள கம்பீர் தற்போது இந்திய கிரிக்கெட்டில் நடந்து வரும் பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி செயல்பட்ட விதம் குறித்தும் பேசியிருக்கிறார்.
கம்பேக் கொடுத்த நட்சத்திரங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். ஆனால் மூன்றாவது போட்டியில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவி செய்தார்.
இந்த தொடரில் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் அரை சதமும் மூன்றாவது போட்டியில் சதமும் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று அணியை வெற்றி பெற வைத்தார். அதே சமயத்தில் இந்திய அணி தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.
தோல்வியை தாண்டி கொண்டாட முடியாது
இதுகுறிப்பு பேசியுள்ள கம்பீர் கூறும் பொழுது ” நான் உண்மையில் அவர்களுடைய செயல் திறனை குறைவாக நினைக்கவில்லை. ஆனால் இது தனிப்பட்ட நபர்களின் செயல் திறன் பற்றியது கிடையாது. எனக்கு என்னுடைய வீரர்களின் தனிப்பட்ட செயல் திறன் எப்பொழுதும் மகிழ்ச்சி தரும். அதே சமயத்தில் நாம் அந்த ஒருநாள் தொடரை இழந்து விட்டோம் என்பதுதான் உண்மை”
இதையும் படிங்க: சாம்சன் டெல்லிக்கு போய் இருக்கணும்.. சிஎஸ்கேவை விட அதுதான் பெஸ்ட் – அஸ்வின் தெரிவித்த கருத்து
“இதுதான் உண்மையான சாரம்சம்
நான் ஒரு பயிற்சியாளராக என்னால் தொடர் தோல்வியை தாண்டி மற்ற விஷயங்களை கொண்டாட முடியாது. என்னால் ஒரு தனிப்பட்ட வீரரை பாராட்ட முடியும். ஒரு தேசமாகவும், ஒரு தனி நபராகவும் நாம் தோல்வியை கொண்டாடக்கூடாது என்பது என்னுடைய தார்மீக பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். இறுதியில் நாங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அதே சமயத்தில் டி20 தொடர் வித்தியாசமானது. அதை நாங்கள் வென்றோம்” என்று கூறி இருக்கிறார்.






