இந்திய அணிக்கு கில் செஞ்சது என்ன?.. இதே தமிழ்நாடு பிளேயரா இருந்தா நீக்கி இருப்பீங்க – பத்ரிநாத் கோபம்

0
210
Gill

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் சுப்மன் கில் எந்த பெரிய பங்களிப்பும் செய்யவில்லை என்றும், இதுவே தமிழ்நாட்டு வீரராக இருந்தால் நீக்கி இருப்பார்கள் என்றும் இந்திய மற்றும் இந்திய மற்றும் தமிழக முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் விமர்சனம் செய்திருக்கிறார்.

நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியில் கில் ஆட்டம் இழந்த விதம் பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. அவர் விக்கெட்டை இழந்த விதத்தால் இந்திய அணி குறிப்பிட்ட ரன்களுக்கு செல்வது தடுக்கப்பட்டது. இருந்த போதிலும் மற்றவர்கள் மோசமாக செயல்பட்டதால் இவர் மீது விமர்சனம் எதுவும் பெரிதாக இல்லை.

- Advertisement -

டெஸ்ட் வடிவத்தில் தடுமாறும் கில்

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றத்தை கொண்டிருந்தார். இறுதியாக அதிலிருந்து மீண்டு வந்தது போல் உள்நாட்டு தொடர்களில் தெரிந்தது. ஆனால் மீண்டும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அவர் விளையாடிய விதம் மற்றும் ஆட்டம் இழந்த விதம் மிகவும் கவலை அளிப்பதாக அமைந்திருக்கிறது.

இது குறித்து இந்திய மற்றும் தமிழக அணியின் முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார். ரன் பங்களிப்பு செய்யவில்லை என்றும் மேலும் பீல்டிங்கில் கூட முக்கியமான இடங்களில் அவர் எந்த வகையிலும் பெரிதாக பங்களிப்பை செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தமிழக வீரராக இருந்தால் நீக்கி இருப்பார்கள்

இதுகுறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் பொழுது “கில் எதிர்பார்த்த அளவிற்கு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. நீங்கள் ரன் எடுக்கலாம் எடுக்காமல் போகலாம் ஆனால் உங்களிடம் உள்நோக்கமும் ஆக்ரோஷமும் இருக்க வேண்டும். அவர் பந்துவீச்சாளர்களை சோர்வடைய வைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்”

“அவர் நின்று விளையாடி பந்தை பழையதாக்க வேண்டும். குறைந்தது 100 பந்துகள் விளையாட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் அவர் வரவேண்டும். ஆஸ்திரேலியா அணியில் இப்படித்தான் அவர்கள் விளையாடினார்கள். இதனால்தான் பும்ரா காயமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது”

இதையும் படிங்க : வருகிறது டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மாற்றம்.. இனி 2 பிரிவுகளாக பிரிக்கப்படும் அணிகள்.. ஐசிசி தலைவர் ஜெய்ஷா அதிரடி

“கில் பேட்டிங்கில் மட்டும் சரியான பங்களிப்பு தராமல் போகவில்லை, பீல்டிங்கிலும் கூட ஸ்லிப், பாயிண்ட் திசைகளில் எந்த ஒரு பங்களிப்பையும் அவர் செய்துவிடவில்லை. இதுவே தமிழக வீரராக இருந்திருந்தால் இந்நேரத்திற்கு அணியை விட்டு நீக்கி இருந்திருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -