அஸ்வினை நியாயமா நடத்தல.. எனக்கு தெரியும்.. வேறு மாநில வீரருக்கு இப்படி நடக்குமா? – பத்ரிநாத் விமர்சனம்

0
167
Ashwin

இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்றும், அவரை நீக்க பல முயற்சிகள் நடந்தது என்றும் இந்தியா மற்றும் தமிழக முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென முடிவை அறிவித்தவுடன் தொடரின் பாதியிலேயே வெளியேறி வந்தது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இது குறித்து சுப்ரமணியம் பத்ரிநாத் சில அதிர்ச்சிகரமான விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

அஸ்வினை நியாயமாக நடத்தவில்லை

இது குறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசும்பொழுது ” இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் நான் அதிர்ச்சி அடைந்தேன். உண்மையை சொல்வது என்றால் அவர் நியாயமாக நடத்தப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். அஸ்வின் முதல் டெஸ்ட் போட்டியின் போதே வெளியேறிவிட நினைத்தார் என ரோகித் சர்மா கூறியிருக்கிறார்”

“அதாவது முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முன்பாக வாஷிங்டன் சுந்தர் விளையாடிய பொழுதே அவர் ஓய்வு பெற முடிவு செய்துவிட்டார் என்று தெரிகிறது. இது அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பதை உங்களுக்கு காட்டுகிறது. இது தமிழ்நாட்டு வீரருக்கு நடந்த பெரிய விஷயம்”

- Advertisement -

அவரை நீக்க முயற்சிகள் நடந்தது

“இத்தனை முரண்பாடுகள் இருந்த பொழுதும் அவர் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஒரு ஜாம்பவான் வீரராக மாறி இருக்கிறார். இதற்காக அவர் என்னெல்லாம் செய்திருப்பார்? என்று கற்பனை செய்து பாருங்கள். அவர் சில மோசமான விஷயங்களை எதிர்கொண்டார் என்பது எனக்கு தெரியும். பல சந்தர்ப்பங்களில் அவரை ஓரங்கட்ட முயற்சிகள் செய்யப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் பீனிக்ஸ் பறவை போல அவர் திரும்பினார்”

இதையும் படிங்க : 109 ரன்.. வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ்.. பங்களாதேஷ் அணி டி20 தொடரை வென்றது

“ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற வேண்டியவர்தான் ஆனால் இப்படி கிடையாது. அவர் புகழ்பெற்ற முறையில் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அதற்கு அவர் மிகவும் சரியானவர். நியாயமான முறையில் அவர் சரியான வகையில் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். வேறு எந்த மாநில வீரருக்காவது ஒரு ஜாம்பவானாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? என்றால் நிச்சயம் கிடையாது. அஸ்வின் நல்ல முறையில் வழி அனுப்பப்பட வேண்டியவர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -