“ஒரே சர்வதேச டி20 சதம் – தொடரும் கில்லின் சாதனை பட்டியல்”!

0
2275

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையான டி20 போட்டி தொடர் நேற்று நடைபெற்றது. இந்தத் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 234 ரன்கள் குவித்து நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. இந்திய அணியின் சுப்மன் கில் அபாரமாக ஆடி தனது முதல் டி20 சதத்தை நிறைவு செய்தார். இவர் 63 பந்துகளில் 126 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்திருக்கும் சாதனையை சுப்மன் கில்லுக்கு முன்னதாக மூன்று வீரர்கள் மட்டுமே எட்டி இருக்கின்றனர். நேற்றைய டி20 போட்டியில் தான் அடித்த சதத்தின் மூலம் அந்தப் பட்டியலில் தன்னையும் இணைத்திருக்கிறார்கள்.

ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் மற்றும் டி20 போட்டிகளில் சதம் அடித்திருக்கும் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இவர் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் மூன்று இரட்டை சதங்களை அடித்து சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச டி 20 போட்டிகளில் நான்கு சதங்களை அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை அடித்திருக்கும் வீரர் ரோஹித் சர்மா தான்.

இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் மார்ட்டின் கப்டில். இவர் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 237 ரன்களை எடுத்தார். மேலும் இவர் டி20 சர்வதேச போட்டிகளில் இரண்டு சதங்களை அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் யுனிவர்சல் பாஸ் கிரிஸ் கெயில் இருக்கிறார். இவரும் 2015 ஆம் ஆண்டு உலக கோப்பையின் போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார் இவர் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் கடைசியாக தன்னையும் இணைத்து இருக்கிறார் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் கில். இந்தப் பட்டியலிலேயே மிக இளம் வயதில் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதமும் டி20 போட்டிகளில் சதம் அடித்த வீரர் இவர் தான் என்பதும் ஒரு சாதனை .