உலக கிரிக்கெட்டில் அடுத்த ஜோ ரூட்டும் இவர்தான்.. கெவின் பீட்டர்சனும் இவர்தான் – ஸ்டூவர்ட் பிராட் கணிப்பு

0
520
Broad

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தற்போது மிகப்பெரிய வீரராக முன்னணியில் இங்கிலாந்தின் ஜோ ரூட் இருக்கிறார். அடுத்து அவருடைய கிரிக்கெட் வாரிசாக யார் இருப்பார் என இங்கிலாந்து அணியின் லெஜண்ட் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறியிருக்கிறார்.

ஜோ ரூட் தற்பொழுது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கும் ஒரே ஒரு வீரராக இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிக்க கூடிய வாய்ப்பில் ஒருவர் இருந்தாலே அவர் மிகப்பெரிய வீரர் என்பது நிதர்சனம்.

- Advertisement -

ஜோ ரூட்டின் ஆதிக்கம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019 ஆம் ஆண்டு வரை ஜோ ரூட் இந்தியாவின் விராட் கோலி, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் சமமாகப் பயணித்து வந்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென அவருடைய பேட்டிங் செயல்பாடு டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக அபாரமாக மாறியது. எல்லோரையும் விட குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரன்கள் தாண்டி இருக்கிறார்.

இத்துடன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை மாற்றியதால், அதற்கும் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொண்டு ஒரு நாள் போட்டி போல டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நவீன காலத்தில் ஜோ ரூட்தான் மிகச் சிறந்த வீரராக இருக்கிறார்.

- Advertisement -

அடுத்த ஜோ ரூட்

இந்த நிலையில் உலக கிரிக்கெட்டில் அடுத்த ஜோ ரூட் போல யார் வருவார்கள் என்று பேசி இருக்கும் ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்தின் இளம் வீரர் ஹாரி புரூக்கை குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவருடைய ஒரு குறிப்பிட்ட ஷாட் பார்ப்பதற்கு கெவின் பீட்டர்சன் போலவும் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசியிருக்கும் ஸ்டூவர்ட் பிராட் கூறும் பொழுது “கோடைகால டெஸ்ட் தொடர் முழுவதும் அவர் இங்கிலாந்து அணியில் எங்களுடன் பயணித்த பொழுது ஹாரி புரூக்கின் ஒரு நெட் செஷன் எனக்கு ஞாபகம் இருக்கிறது. மேலும் அவர் ஆப் ஸ்டெம்ப் லைனில் இருந்து பந்தை மிட் விக்கெட் திசையில் தூக்கி அடிக்கும் அபார சக்தி பெற்றவராக கெவின் பீட்டர்சன் போல இருக்கிறார்.

இதையும் படிங்க : 6,6,6,6.. 20 பந்தில் 50.. பூரன் அதிரடியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.. தென் ஆப்பிரிக்கா அணி தோல்வி.. முதல் டி20

நானும் ஜிம்மி ஆண்டர்சனும் கவுண்டி கிரிக்கெட்டில் யார்க்ஷைர் அணியில் அவருடன் இணைந்து விளையாடி இருக்கிறோம். அப்போது அவரைப் பார்த்த பொழுது அவர்தான் அடுத்த ஜோ ரூட் என்று நாங்கள் உணர்ந்து பிரஷரை விட்டு வெளியில் வந்தோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -