சென்னை மற்றும் மும்பை என இரு அணிகளுக்கும் விளையாடிய வீரர்களை கொண்டு அமைக்கப்பட்ட வலுவான 11 வீரர்கள் கொண்ட அணி

0
2267
Harbhajan Singh and Mike Hussey

ஐபிஎல் தொடரை பொறுத்தவரைக்கும் இரண்டு முக்கிய அணைகள் என்றால் அது சென்னை மற்றும் மும்பை அணி தான். நடந்த 13 தொடர்களில் இந்த இரண்டு அணிகள் மட்டுமே எட்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. மிகவும் வலுவான அணிகளாக இரண்டு அணிகளுமே இருப்பதால் இரண்டு அணிகளுமே மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள் எடுப்பதில் போட்டி போட்டுக் கொண்டு செயல்படும். இதனால் ஒரே வீரர் சில நேரங்களில் சென்னை மும்பை என்று இரண்டு முக்கிய அணிகளுக்குமே விளையாடியிருப்பார். அப்படி இரண்டு அணிகளுக்கும் விளையாடிய பதினோரு வீரர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட அணி குறித்து இங்கு காண்போம்.

துவக்க வீரர்கள் – மைக் ஹஸ்ஸி மற்றும் பார்த்தீவ் பட்டேல்

இந்த இரண்டு இடது கை பேட்டிங் வீரர்களுமே கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும்போது சென்னை அணிக்காக விளையாடியவர்கள். அதன் பிறகு தங்களின் கேரியர் முடியும் தருவாயில் சில ஆண்டுகாலம் மும்பை அணிக்கு விளையாடினர். தற்போது மைக் ஹசி சென்னை அணியின் பயிற்சியாளராகவும் பார்த்தீவ் பட்டேல் மும்பை அணியின் நிர்வாகத்தில் ஒரு முக்கிய வேலையிலும் உள்ளார்.

- Advertisement -

மிடில் ஆடர் – ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, டுவைன் ஸ்மித்

ராபின் உத்தப்பா மற்றும் அம்பாதி ராயுடு என இருவருமே மும்பை அணிக்கு தங்களின் ஐபிஎல் வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால் தற்போது இரண்டு வீரர்களுமே சென்னை அணிக்காக விளையாடி வருகின்றனர். அதேபோல மற்றொரு வீரரான டுவைன் ஸ்மித் மும்பை அணிக்காக மிடில் ஆர்டரில் சில போட்டிகளில் விளையாடி விட்டு பின்பு சென்னை அணிக்காக துவக்க வீரராக களமிறங்கி அசத்தியவர்.

ஆல்ரவுண்டரகள் – திசாரா பெரேரா, டுவைன் பிராவோ மற்றும் ஜேக்கப் ஓரம்

டுவெய்ன் பிராவோ ஆரம்ப காலத்தில் மும்பை அணிக்காக விளையாடியவர். ஒரு கட்டத்தில் மும்பை அணிக்கு கேப்டனாக கூட ஒரு போட்டியில் செயல்பட்டுள்ளார். அதேபோல ஓரமும் மும்பை அணிக்காக ஒரு போட்டியில் விளையாடி விட்டு அதன் பிறகு சென்னை அணிக்காக விளையாடியவர். திசாரா பெரேரா ஆகும் மும்பை மற்றும் சென்னை என இரு அணியிலும் விளையாடிய வீரர்.

பந்துவீச்சாளர்கள் – ஹேசல்வுட், மெஹ்ரா, ஹர்பஜன் மற்றும் கர்ண் சர்மா

ஆரம்ப கட்டத்தில் மும்பை அணிக்காக விளையாடி சென்னை அணியுடன் தனது ஐபிஎல் கேரியரை முடித்தவர் ஆஷிஸ் நெஹ்ரா. அதேபோல ஹேசல்வுட் தற்போது சென்னை அணிக்காக விளையாடினாலும் இவரும் மும்பை அணிக்காக விளையாடியவர். இரண்டு ஸ்பின்னர்கள் ஆன ஹர்பஜன் மற்றும் கர்ண் என இருவரும் இந்த அணியின் ஸ்பின்னர்களாக உள்ளனர்.

- Advertisement -

முழு அணி விவரம் – மைக் ஹசி, பார்த்திவ் பட்டேல், ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, டுவைன் ஸ்மித், திசாரா பெரேரா, டுவைன் பிராவோ, ஜேக்கப் ஓரம், ஹேசல்வுட், மெஹ்ரா, ஹர்பஜன் மற்றும் கர்ண் சர்மா.