2022 ஐ.பி.எலில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் சிறந்த பிளேயிங் XI

0
3185
Strongest Playing XI Of all IPL Teams 2022

2022 ஐ.பி.எலுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12 & 13 தேதிகளில் சிறப்பாக முடிவடைந்தது. அனைத்து அணிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களுக்கான வீரர்களை வாங்கினர். 10 அணிகளின் சிறந்த பிளேயிங் லெவன் குறித்து இக்கட்டுரையில் பின்வருமாறு காண்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு சாம்பியன்களான சி.எஸ்.கே பல வீரர்களை மீண்டும் வாங்கியது. இருப்பினும் டு பிளசிஸ், ரெய்னா மற்றும் ஷர்தூல் தாக்கூர் போன்ற முக்கிய வீரர்களை இழந்தது. அதற்கு பதில் தகுதியான வீரர்களை அணியை பலப்படுதியது.

- Advertisement -

சிறந்த பிளேயிங் லெவன் : ருத்துராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, மொயின் அலி, ஷிவம் டுபே, அம்பாத்தி ராயுடு, தோனி, ரவிந்திர ஜடேஜா, பிராவோ, தீபக் சாஹர், ஆதம் மில்னே, துசார் தேஷ்பாண்டே

மும்பை இந்தியன்ஸ்

துவக்கத்தில் மும்பை அணி எந்த ஒரு வீரரையும் வாங்க விருப்பம் தெரிவிக்காததால் ரசிகர்கள் மிகவும் கொந்தளித்தனர். மிகவும் பொறுமையாக இருந்த மும்பை நிர்வாகம் கடைசியாக வெறும் 8 கோடிக்கு ஜோப்ரா ஆர்ச்சரை கைபற்றி அசத்தியது. அவர் இந்த வருடம் ஆடமாட்டார் என்றாலும் வருங்காலத்தை எண்ணி மும்பை இந்தியன்ஸ் இதை செய்துள்ளது. ஏலம் முடிவில் ஓரளவு நல்ல அணியுடன் கிளம்பினர்.

சிறந்த பிளேயிங் லெவன் : ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், கிரன் போலார்ட், டிம் டேவிட், பேபியன் ஆலன், ஜெயதேவ் உனத்கட், முருகன் அஷ்வின், பும்ரா, டைமல் மில்ஸ்

- Advertisement -

டெல்லி கேப்பிட்டல்ஸ்

முதல் நாள் ஏலத்தில் சிறப்பான வீரர்களை வாங்கிய டெல்லி நிர்வாகம் அடுத்த நாள் சுமாராக தான் செயல்பட்டது. எனினும் இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி அனைத்து அனிகளைக் காட்டிலும் வலுவாக தென்படுகிறது.

சிறந்த பிளேயிங் லெவன் : டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட், ரோவ்மன் பாவல், ரிப்பல் பட்டேல், அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்க்யா, சேத்தன் சக்காரியா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ப்கொல்கத்தா அணியின் திட்டங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. முடிவு செய்த வீரர்களை எவ்வளவு செலவானாலும் வாங்கியேத் தீர வேண்டும் என்ற முடிவில் இருந்தது. கே.கே.ஆர் அணியின் இந்திய பந்துவீச்சாளர்கள் துறையில் பெரிதாக யாருக்கும் அனுபவம் இல்லை.

சிறந்த பிளேயிங் லெவன் : அலெக்ஸ் ஹேல்ஸ், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, அன்குல் ராய், ஷெல்டன் ஜாக்சன், ஆண்ட்ரே ரஸல், பேட் கம்மின்ஸ், சுனில் நரைன், ஷிவம் மாவி, சிவி வருண்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டு பிளசிஸை வெறும் 7 கோடிக்கு கைப்பற்றியது. விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் தவிர அனுபவம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள் அவர்களுக்கு கிடையாது. இளம் வீரர்கள் ஜொலித்தால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

சிறந்த பிளேயிங் லெவன் : ஃபாப் டு பிளசிஸ், விராட் கோலி, மகிபால் லோம்ரோர், மேக்ஸ்வெல், அஞ்சு ராவட், தினேஷ் கார்த்திக், ஷபாஸ் அஹமத், ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், ஹேசல்வுட், சிராஜ்

பஞ்சாப் கிங்ஸ்

இதுவரை நடந்த ஏலங்களைக் காட்டிலும் இம்முறை அபாரமாக செயல்பட்டது. சரியான வீரர்களை போராடி வாங்கியது. முதல் முறை கோப்பை அடிப்பதற்குத் தேவையான அணியை தேர்வு செய்துள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிறந்த பிளேயிங் லெவன் : மயங்க் அகர்வால், ஷிக்கர் தவான், ஜானி பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன், ஷாருக் கான், ரிஷி தவான், ஒடியான் ஸ்மித், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், கசிகோ ரபாடா, ஆர்ஷதீப் சிங்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

புதிய அணியான லக்னோ ஏலத்தில் அதிரடியான வீரர்களை வாங்கி பலமான அணியை உருவாக்கி உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக கம்பீர் திகழ்வார். ஏலத்தில் அணி உரிமையாளருடன் இணைந்து நல்ல அணியை வடிவமைக்க உதவினார்.

சிறந்த பிளேயிங் லெவன் : கே.எல்.ராகுல், டி காக், மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், ரவி பிஷ்னாய், மார்க் வுட், ஆவேஷ் கான்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஏலத்தில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அணியாக ராஜஸ்தான் அணி திகழ்ந்தது. அனுபவ வீரர்களும் இளம் வீரர்களும் கலந்த ஓர் அதிரடியான அணியை எடுத்துள்ளது.

சிறந்த பிளேயிங் லெவன் : ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால், படிக்கல், சாம்சன், ஹெட்மேயேர், ரியான் பராக், அஷ்வின், சாஹல், கோல்டர்னைல், போல்ட், பிரசித் கிருஷ்ணா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

அதிக பணத்துடன் ஏலத்திற்குள் நுழைந்த ஹைதராபாத் மற்ற அணிகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நட்சத்திர வீரர்களை வாங்கிப் போட்டது. முக்கியமாக பந்துவீச்சு துறை அமோகமாக உள்ளது.

சிறந்த பிளேயிங் லெவன் : ராகுல் திரிப்பாத்தி, மார்க்கரம், நிக்கோலஸ் பூரன், கேன் வில்லியம்சன், அப்துல் சமாத், அபிஷேக் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், கார்த்திக் தியாகி, சுச்சித், புவனேஷ்வர் குமார், உம்ரன் மாலிக்

குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் அணியில் எப்படி பார்த்தாலும் டாப் ஆர்டர் பலவீனமாக தான் உள்ளது. ஓர் அனுபவம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன் அவர்களுக்கு இல்லை. அது தவிர ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக அமைந்து விட்டனர்.

சிறந்த பிளேயிங் லெவன் : ஜேசன் ராய், ஷுப்மன் கில், அபினவ் சதராங்கனி, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, மாத்யூ வேட், ராகுல் திவாட்டியா, ரஷீத் கான், சாய் கிஷோர், முஹம்மது ஷமி, லாக்கி பெர்குசன்