நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிரான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. புனே மைதானம் எப்படி?

0
1224
ICT

நாளை இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் தனது நாலாவது ஆட்டத்தில் மகாராஷ்டிரா புனே மைதானத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி யாருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய அணியாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. எனவே பங்களாதேஷ் அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

- Advertisement -

மேலும் 2007 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை பங்களாதேஷ் அணி வீழ்த்தி இருக்கிறது. அந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றில் வெளியேறி வருவதற்கு பங்களாதேஷ் அணிதான் முக்கியக் காரணம். தற்போது நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரிலும் இந்திய அணியை பங்களாதேஷ் அணி வீழ்த்தி இருக்கிறது.

போட்டி நடக்கும் புனே மைதானத்தை பொறுத்தவரையில் 300 ரன்கள் என்பது சாதாரணமான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தை கொண்டிருப்பதால், இங்கு திறமையான பந்துவீச்சாளர்களுக்குத் தேவை அதிகம்.

பங்களாதேஷ் பேட்டிங் யூனிட்டில் கேப்டன் ஷாகிப் அல்ல ஹசன் மிகவும் முக்கியமான ஒருவராக இருப்பார். இது மட்டும் இல்லாமல் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஒருவர் ஷாகிப் போல இடது கை ஆட்டக்காரர்.

- Advertisement -

எனவே இந்திய அணி ஷாகிப்பை குறி வைக்கும் விதமாக வலதுகை சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை விளையாட வைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

சர்துல் தாக்கூர் ரன் கண்ட்ரோல் தர மாட்டார். அதே சமயத்தில் அஸ்வின் ரன் கண்ட்ரோல் தரக்கூடியவர். எனவே பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் அவர் தேவை அதிகம். மேலும் அஸ்வின் பேட்டிங் பங்களிப்பும் செய்யக்கூடியவர்.

இந்தக் காரணத்தினால் கடந்த இரு நாட்களாக அஸ்வின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. எனவே அவர் நாளைய போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக தென்படுகிறது.

நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிரான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.