லெஜன்ட் கிரிக்கெட் லீக் தொடருக்கான வலிமையான உத்தேச இந்திய ப்ளேயிங் லெவன்

0
1454
Legends Cricket League

லெஜன்ட்ஸ் லீக் என்ற பெயரில் முன்னாள் வீரர்கள் விளையாடிய டி20 லீக் தொடர் இந்த ஆண்டு ஜனவரி 20 டூ 29 வரை ஓமன் நாட்டில் மஸ்கட் நகரில் நடைபெற்றது. இதில் இன்டியன் மகாராஜாஸ், ஆசிய லயன்ஸ், வேர்ட்ல் ஜெயன்ட்ஸ் என மூன்று அணிகள் கலந்து கொண்டது. இதில் வேர்ட்ல் ஜெயன்ட்ஸ் அணி சாம்பியன் ஆனது. செளத் ஆப்பிரிக்காவின் மோர்னோ மோர்கல் மேன் ஆப் தி சீரியஸ் அவார்டை பெற்றார்.

இந்த ஆண்டு முதல் சீசனில் இன்டியன் மகராஜாஸ் அணியில் முகம்மது கைப், இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், முனாப் படேல் போன்ற பிரபல இந்திய வீரர்கள் விளையாடினார்கள். தற்போது லெஜன்ட்ஸ் லீக் டி20 இரண்டாவது சீசன் இந்த ஆண்டு செப்டம்பர் அக்டோபரில் நடக்க இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் இன்டியன் மகாராஜாஸ் அணி வலிமையானதாக இருந்தாலும், பங்கேற்க வாய்ப்புள்ள சில இந்திய வீரர்கள் இணைந்தால் இன்னும் வலிமையாகும். அப்படியான வீரர்களைக் கொண்டு ஒரு வலிமையான ப்ளேயிங் லெவனை இந்தக் கட்டுரையில் காண்போம்!

- Advertisement -

வீரேந்திர சேவாக் – பார்த்திவ் படேல்: துவக்க ஆட்டக்காரர்கள்

முதல் பந்திலிருந்து அனாசயமாக அடித்து வெளுப்பதில் நிகரற்ற ரைட் ஹேன்ட் பேட்ஸ்மேன். இவரோடு விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் இணையும் பொழுது, ப்ளேயிங் லெவனில் விக்கெட் கீப்பரும் கிடைப்பார், ரைட்-லெப்ட் ஓபனிங் பேட்டிங் காம்பினேசனும் அமையும்!

சுப்ரமணியம் பத்ரிநாத் – நமன் ஓஜா: மிடில் ஆர்டர்

பத்ரிநாத் மிடில் ஆர்டருக்காகவே உருவானதொரு சிறப்பு பேட்ஸ்மேன். இவரோடு அதிரடியில் மிரட்டக் கூடிய நமன் ஓஜா இணைந்தால், மிடில் ஆர்டரில் விக்கெட் சரிவும் இல்லாமல், சராசரியாக ரன்களும் வந்துகொண்டு இருக்கும். நமன் ஓஜாவின் பேட்டிங் கடந்த சீசனில் மிக அதிரடியாக இருந்தது!

இர்பான் பதான் – யூசுப் பதான்- ஸ்டூவர்ட் பின்னி: ஆல்ரவுண்டர்கள்

ஐந்தாவது விக்கெட்டுக்கு லெப்ட்-ஹேன்ட் இர்பான் பதான் வருவது சிறப்பானது. இது எதிரணியின் பவுலிங் வியூகங்களை மாற்றும். அடுத்து ஆறாவது இடத்தில் பினிசர் ரோலில் யூசுப் பதானின் அதிரடி மிகப்பெரிய பிளஸாக அமையும். ஏழாவது இடத்தில் வரும் ஸ்டூவர்ட் பின்னியும் சிக்ஸர் அடிக்கும் திறமையுடைய பேட்ஸ்மேன். இவர்கள் மூவருமே பந்துவீச்சாளர்களும் என்பதால், இரண்டு பாஸ்ட் பவுலர், ஒரு ஸ்பின்னரின் இடமும் நிரப்பப்படும்!

- Advertisement -

ஹர்பஜன் சிங் – பிரவீன் தாம்பே: ஸ்பின்னர்கள்

ஹர்பஜன் சிங் ஆப்-ஸ்பின் ஸ்பெசலிஸ்ட் பவுலர். மேலும் பேட்டிங்கில் எட்டாவது இடத்தில் கைகொடுக்கக் கூடியவர். பிரவீன் தாம்பே கணிக்கவே முடியாத லெக்-ஸ்பின்னர். எந்த நேரத்திலும் விக்கெட் வீழ்த்தக் கூடியவர். இவர்களது கூட்டணி மிகச்சிறப்பானதாய் அமையும்!

வினய் குமார் – ஸ்ரீசாந்த்

ஆல்ரவுண்டர்களில் இரண்டு மிதவேகப்பந்து வீச்சாளர்கள் இருக்க இவர்கள் இருவரும் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள். இதில் வினய் குமார் பேட்டிங்கில் ஒன்பதாவது இடத்தில் வந்து அதிரடியாய் விளையாடக் கூடிய திறமை இருக்க வீரர் என்பது கூடுதல் பலம். இந்தக் கலவையில் இன்டியன் மகாராஜாஸ் அணி அமைந்தால், லெஜன்ட்ஸ் லீக் செகன்ட் சீசனில் சாம்பியனாக அதிக வாய்ப்பாருக்கிறது!