டாப் 10

கிரிக்கெட் வரலாற்றில் வினோதமான அவார்டுகளை கொடுத்த சம்பவங்களின் பட்டியல்

ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியிலும் நன்றாக விளையாடும் வீரர்கள் மேன் ஆப் தி மேட்ச் என்கிற அவார்டு கொடுக்கப்படும். அதேபோல இரு அணிகளுக்கு இடையே அல்லது ஏதாவது ஒரு தொடரில் நன்றாக ஆடி இறுதியாக வெற்றி பெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.

- Advertisement -

இவ்வாறு வழங்கப்படும் அவார்டுகள் ஒரு சமயம் மிக வித்தியாசமாகவும் வினோதமாகவும் இருக்கும். அப்படி வினோதமாக வழங்கப்பட்ட சில நிகழ்வுகளை பார்ப்போம்.

கொக்கோகோலா டிராபி 1997-98

Photo Source: MOGHRABI/AFP/Getty Images

கொக்ககோலா 1997-98 ஆண்டின் போது முத்தரப்பு ஒருநாள் தொடர் நடத்தியது இந்த தொடர் இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்த தொடரை இந்தியா வென்ற நிலையில் தொடருக்கான கோப்பை வழங்கப்பட்டது. கோப்பை வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக இருந்தது. கொக்ககோலா பாட்டிலின் மூடியை போல் அந்தக் கோப்பை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

இரண்டரை கிலோ மீன்

சமீபத்தில் காஷ்மீரில் நடந்த ஒரு உள்ளூர் நடந்த கிரிக்கெட் போட்டியில், இந்த விசித்திரமான நிகழ்வு நடந்தது. மைதானத்தின் தரை மறு வடிவமைப்பதற்கான பணம் போதாத நிலையில், மறுபுறம் வடிவமைப்புக்கான பணத்தை விளையாட்டு வீரர்கள் மத்தியில் வசூலிக்கப்பட்டது.

இருப்பினும் நன்றாக விளையாடிய வீரருக்கு, பாராட்டு தெரிவிக்கும் வண்ணம் இரண்டரை கிலோ மீன்மேன் ஆப் தி மேட்ச் பரிசாக வழங்கப்பட்டது.

டக் பிஸ்கட் கப்

Photo: PCB

2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடத்தப்பட்டது. இந்த தொடருக்கு ஸ்பான்சராக டக் பிஸ்கட் நிறுவனம் வந்தது. இதனை அடுத்து இந்த தொடருக்கான கோப்பையை அந்நிறுவனம் அவர்களுடைய பிஸ்கட் வடிவத்தில் கோப்பையை வடிவமைத்தது. தொடர் தொடங்குவதற்கு முன்பு இரு அணிகளின் கேப்டன்கள் டக் பிஸ்கட் கோப்பையை பிடித்த வண்ணம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது.

டிஎல்எப் கோப்பை 2006

Photo Source: Twitter

கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிகமாக பார்க்கப்பட்ட போட்டிகள் என்றால் அது இந்திய மற்றும் பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போட்டிகள் ஆகும். ஆனால் 2012 க்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து எந்தவித தொடரும் ஆடவில்லை.

இருப்பினும் முந்தைய காலத்தில் 2006 ஆம் ஆண்டு டிஎல்எஃப் நிறுவனம் சார்பாக ஒரு தொடர் இவ்விரு அணிகளுக்கு இடையே நடத்தப்பட்டது. இந்த தொடருக்கான கோப்பையை டிஎல்எஃப் மிகப்பெரிய அளவில் கிட்டத்தட்ட ஏழு எட்டு பேர் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வடிவமைத்தது.

ஜூஸ் பிளண்டர்

பங்களாதேஷில் நடத்த டாக்கா பிரீமியர் லீக்கில் மேன் ஆப் தி மேட்ச் அவார்டாக ஜூஸ் பிளண்டர் வழங்கப்பட்டது. போதுமான ஸ்பான்சர் நிறுவனங்கள் வராத காரணத்தினால் வேறு வழியின்றி அந்த ஜூஸ் பிளன்டரை கொடுக்க வேண்டிய நிலைக்கு நிர்வாகம் ஆளானது.

நன்றாக விளையாடிய லூக் ரைட்டுக்கு அந்த ஜூஸ் பிளன் டர்  இறுதியாக வழங்கப்பட்டது. மேலும் அந்தப் பரிசைப் பெற்று விட்டீர்கள் பதிவிட்ட லூக், நான் இதுவரையில் எந்த ஒரு போட்டியிலும் இந்த மாதிரியான ஒரு பரிசு வாங்கியது இல்லை என்று நக்கலாக பதிவிட்டிருந்தார்

ரைஸ் குக்கர்

அதே பங்களாதேஷில் நடந்த டாக்கா பிரீமியர் லீக்கில், முன்பு வழங்கப்பட்ட ஜூஸ் பிளண்டர் போல் இம்முறை ரைஸ் குக்கர் பரிசாக வழங்கப்பட்டது.

அந்தப் பரிசு இங்கிலாந்து அணியின் கேப்டனான இயான் மோர்கனுக்கு இறுதியாக வழங்கப்பட்டது. இந்த பரிசை அவர் வாங்குவார் என்று ஒரு நாளும் நினைத்திருக்க மாட்டார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷூ லேஸ் மற்றும் பேட் கிரிப்

ஆஸ்திரேலியாவில் இந்தியா மட்டும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நடத்தப்பட்ட தொடரில், இந்த வினோதமான சம்பவம் நடைபெற்றது.

தொடரில் நன்றாக விளையாடிய ஜய் ரிச்சர்ட்சனுக்கு பரிசாக பேட் கிரிப் மற்றும் ஷூ லேஸ் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒரு தொடரில் இவ்வாறு வழங்கப்பட்ட பரிசு அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by