டி20 உலகக் கோப்பை 2024

டி20 உலககோப்பைக்காக.. பும்ராவுக்கு ஓய்வா?.. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் வெளியான முக்கிய தகவல்

இந்தியாவில் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் மே 21ஆம் தேதி முதல் துவங்குகின்றன. மே 26 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதற்குப் பிறகு ஜூன் ஒன்றாம் தேதி டி20 உலகக் கோப்பை துவங்குகிறது.

- Advertisement -

பிசிசிஐ ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெறாத அணிகளில் இருக்கும் டி20 உலகக் கோப்பை இந்திய வீரர்கள், முன்கூட்டியே முதலில் விளையாடும் அமெரிக்காவுக்கு செல்வதற்கான முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி முதல் பேட்ச் வீரர்கள் மே 21 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார்கள்.

இதற்கு அடுத்து ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்து உடனே இரண்டாவது பேட்ச் இந்திய வீரர்கள் அமெரிக்கா செல்கிறார்கள். ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பைக்கு இடையே ஆன நாட்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தினால் பிசிசிஐ இப்படியான முடிவு எடுத்திருக்கிறது.

இந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்திருக்கிறது. எனவே டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து, அதிக பணிச்சுமை கொண்ட நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஓய்வு கொடுக்குமா? என்கின்ற கேள்வி இருந்து வருகிறது.

- Advertisement -

தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியில் தரப்பில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அந்த அணியின் வீரர் நமன் திர் இது குறித்து பேசும்பொழுது “பும்ராவுக்கு ஓய்வு தருவது பற்றி எதுவும் இப்பொழுது வரை நடக்கவில்லை. அதுகுறித்து எதுவுமே இதுவரை விவாதிக்கப்படவில்லை. ஆனாலும் நாள் முடிவில் இது குறித்து இறுதி முடிவை எடுப்பது அணி நிர்வாகத்தின் கையில் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை ஜெயித்தால்.. பல லட்சம் பரிசு.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிறப்பு அறிவிப்பு

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எப்படியும் ஓரளவுக்கு கௌரவமான முறையில் ஐபிஎல் தொடரை முடிப்பதற்காக பும்ராவை விளையாட வைக்கவே செய்யும் என்று தெரிய வருகிறது. கடைசி ஒன்று இரண்டு போட்டிகளில் அவருக்கு ஓய்வு கிடைக்கும் பட்சத்தில், அது டி20 உலக கோப்பைக்கு தயாராவதற்கு அவருக்கு பெரிய உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by