தங்களுடைய பெயர்களை மாற்றிக் கொண்ட 5 கிரிக்கெட் வீரர்கள்

0
1137
Dilshan and Mohammad Yousuf

கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய உணவு பழக்கங்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே வருவார்கள். நீண்டநாள் விளையாடுவதற்காக அவர்கள் இவ்வாறு மாற்றி வருவது வழக்கமாகும். நல்ல உடற்  தகுதியுடன் விளையாடுவதற்காகவே இவ்வாறு அவர்கள் உணவு பழக்ககங்ளை மட்டுமின்றி பல்வேறு உடற்பயிற்சி மற்றும் கிரிக்கெட் சம்பந்தமான விஷயங்களை மேம்படுத்திக் கொண்டே வருவார்கள்.

ஆனால் மறுப்பக்கம், விசித்திரமாக கிரிக்கெட் வீரர்கள் அவர்களுடைய பெயர்களை மாற்றிக் கொண்டும் வந்துள்ளனர். பெயர்களை மாற்றுவதன் மூலம் அவர்களுடைய கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என நம்பிக்கையில் (நுமெரோலஜி நம்பிக்கை) பெயர்களை மாற்றி ஒரு சில வீரர்கள் விளையாடி வந்துள்ளனர். அப்படி தங்களுடைய இயற்பெயரை மாற்றி விளையாடிய கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்

- Advertisement -

5. அஸ்கர் அஃப்கான்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆஸ்கர் ஆவார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்த வீரராக இவர் அனைவராலும் அறியப்படுகிறார். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் மிக அற்புதமாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவர் முதன் முதலாக விளையாடிய போது இவருடைய இயற்பெயர் அஸ்கர் ஸ்டணிக்ஸை ஆகும். ஆனால் திடீரென தனது பெயரை அஸ்கர் அஃப்கான் என அவர் இடையில் மாற்றிக்கொண்டார்.

4. முகமது யூசப்

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் பிறக்கும் பொழுது  முஸ்லிம் கிடையாது. அவர் முதலில் ஒரு கிறிஸ்துவராக பிறந்தவர். அதன் பின்னரே முஸ்லிமாக மாறி கொண்டார். அதேபோல் முஸ்லிமாக மாறி கொண்ட நிலையில் அவர் தன்னுடைய பெயரை யூசப் யுஹானா என்று வைத்துக் கொண்டார். 

ஆனால் அதற்குப் பின்னர் முகமது யூசப் என தனது பெயரை மாற்றிக் கொண்டு இன்றுவரை முகமது யூசப் ஆக இருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த வீரராக அவர் இருந்தார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

3. மன்சூர் அலிகான் பட்டவுடி

ஆறாவது நவாபான பட்டவுடி, ஆரம்பத்தில் அவருடைய இயற்பெயர் நவாப் பட்டவுடி ஜூனியர் ஆகும். அதன் பின்னர் இந்திய அரசாங்கம் அரசர்களின் பெயர்களை வைக்கக் கூடாது என்று சட்டம் திருப்பத்தில் வந்த நிலையில் தன்னுடைய பெயரை, மன்சூர் அலிகான் பட்டவுடி என மாற்றிக் கொண்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் புரிந்த சாதனை மிகவும் மகத்தானது வெறும் நாற்பத்தி ஐந்து போட்டிகளில் 6 டெஸ்ட் சதம் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் அவெரேஜ் 35 ஆகும்.

2. பாப் விலிஸ் 

இவரது இயற்பெயர் ஜார்ஜ் விலிஸ் ஆகும். ஆனால் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் பாப் விலிஸ் அவருடைய தீவிர ரசிகரான இவர், தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ள நினைத்தார். அதன்படி சட்ட நெறிகளை பூர்த்தி செய்து தன்னுடைய பெயரை பாப் விலிஸ் என பின்னர் மாற்றிக் கொண்டார். இவர் கிரிக்கெட்டில் புரிந்த சாதனைகள் அவ்வளவு எளிதில் கூறிவிட முடியாது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 375 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். அதேபோல 16 முறை 5 விக்கெட் ஹால் எனப்படும் சாதனைக்கும் சொந்தமானவர்.

1. திலகரத்னே தில்ஷன்

இலங்கையை சேர்ந்த தில்சன் பெயரைக் கேட்டவுடன் அனைவருக்கும் அனைவருக்கும் வருவது அவருடைய ஸ்கூப் ஷாட்டுதான். மிக அற்புதமாக அதேசமயம் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர் ஆவார். இங்கிலீஷ் அவனுடைய தந்தை முஸ்லிம் அதேபோல இவரது தாயார் ஒரு புத்த மதத்தை சார்ந்தவர் ஆவார்.

இவருடைய இயற்பெயர் ஆரம்ப காலகட்டங்களில், அவருடைய தந்தையின் மதத்தை சார்ந்த படி  துவான் முகமது தில்ஷன் ஆகும். அதன் பின்னர் காலப்போக்கில் இவர் தன்னுடைய பெயரை தனது தாயார் மத சார்பு படி மாற்றிக் கொள்ள நினைத்தார். அதன்பின்னர் அதன்படி திலகரத்னே தில்ஷன் என தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார்.