” விசித்திரமான கேப்டன் ” – ரிஷப் பண்ட் எடுத்த முடிவுக்கு ஆகாஷ் சோப்ரா & மைக்கல் வாகன் கண்டனம்

0
186
Aakash Chopra and Michael Vaughan about Rishabh Pant

நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் கொல்கத்தா அணி குவித்தது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 34 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். டெல்லி அணியில் குல்தீப் யாதவ் 3 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மறுப்பக்கம் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய டெல்லி அணி ஆரம்பத்திலேயே இரண்டு விக்கட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. பின்னர் டேவிட் வார்னர் மற்றும் லலித் யாதவ் ஜோடி நிதானமான ஆட்டத்தில் ஈடுபட்டது. நேற்றைய ஆட்டத்தில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 26 ரன்களில் 42 ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 87 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ரோவ்மென் போவெல் மற்றும் அக்ஷர் பட்டேல் ஜோடி பினிஷிங் செய்தது. குறிப்பாக போவெல் 16 பந்துகளில் 33* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.19 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ரிஷப் பண்ட்டை வறுத்தெடுத்த ட்விட்டர்வாசிகள்

நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் மிக அபாரமாக பந்துவீசினார். நேற்று அவர் கைப்பற்றிய விக்கட்டுகள் கொல்கத்தா அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுக்கள் ஆகும். அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அதிரடி வீரர்கள் சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரூ ரசல், மற்றும் விக்கெட் கீப்பர் இந்திரஜித் ஆகியோரின் விக்கெட்டுகளை மிக சாமர்த்தியமாக கைப்பற்றினார்.

- Advertisement -

3 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி 14 ரன்கள் மட்டுமே அவர் கொடுத்திருந்தார். நேற்று ரிஷப் பண்ட் குல்தீப் யாதவை 4வது ஓவர் வீச அனுமதிக்கவில்லை. நேற்றைய போட்டியில் அபாரமான பார்மில் இருந்த அவருக்கு நிச்சயமாக 4வது ஓவர் கொடுத்திருக்க வேண்டும்.

அவருக்கு மாற்றாக லலித் யாதவிற்கு 17வது ஓவரை நேற்று ரிஷப் பண்ட் கொடுத்தார். அந்த ஓவரில் 17 ரன்கள் சென்றது. இந்த ஒரு முடிவு இந்த தவறான முடிவு என்று டுவிட்டரில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர். இன்னொரு பக்கம் ரிஷப் பண்ட்டை ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா, “குல்தீப் யாதவிற்கு நான்காவது ஓவரை ரிஷப் பண்ட் ஏன் கொடுக்கவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் இது ஒரு மிகப்பெரிய மர்மமாக இருக்கிறது”, என்று ட்வீட் செய்தார்.

“விசித்திரமான கேப்டன்சி, குல்தீப் யாதவ் 4 ஓவர்களையும் நேற்று வீசியிருக்க வேண்டும்.”இவ்வாறு தன்னுடைய ஆதங்கத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் ட்வீட் செய்தார்.

இவ்வாறு தவறாக கேப்டன்சி செய்தால், எவ்வாறு இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பை இவருக்கு வருங்காலத்தில் நம்பி கொடுப்பது என்பது போன்ற தங்களுடைய ஆதங்கத்தை ரசிகர்கள் நேற்று தொடர்ச்சியாக ட்வீட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது