வீடியோ; 1999 உலக கோப்பை கிப்ஸ் செய்த அதே தப்பை 2023 ஆசஸில் செய்த ஸ்டோக்ஸ் – திரும்பும் வரலாறு?!

0
2093
Stokes

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்பொழுது இங்கிலாந்தில் நடந்து வரும் ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது!

முதலில் நடைபெற்ற நான்கு போட்டியில் இரண்டு போட்டிகளை ஆஸ்திரேலியாவும் ஒரு போட்டியை இங்கிலாந்தும் வென்றிருந்த நிலையில், நான்காவது போட்டி மழையால் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிரா ஆனது.

- Advertisement -

இந்த நிலையில் ஐந்தாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 283 & 395 ரன்கள் எடுத்தது. தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 295 ரன்கள் எடுத்திருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு இலக்காக இங்கிலாந்து அணி 384 ரன்கள் நிர்ணயித்தது.

நேற்று நான்காவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவஜா இருவரும் அரை சதம் அடித்து, விக்கெட் இழப்பில்லாமல் 135 ரன்கள் எடுத்திருந்த பொழுது, மழையால் ஆட்டம் நிறுத்திக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி டேவிட் வார்னர், உஸ்மான் கவஜா, மார்னஸ் லபுசேன் என மூன்று விக்கெட்டுகளை இழந்து, 238 ரன்கள் சேர்த்திருக்கிறது. இரண்டு செஷன்கள் மீது இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு தற்பொழுது 146 ரன்கள் வெற்றிக்கு தேவைப்படுகிறது. கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருக்கிறது. களத்தில் ஸ்மித் 40 மற்றும் ஹெட் 31 இருவரும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஸ்மித் ஆட வந்த சிறிது நேரத்தில் மொயின் அலி பந்தை கிளவ்வில் வாங்க, பந்து லெக் ஸ்லீப்பில் நின்றிருந்த பென் ஸ்டோக்ஸ் இடம் கேட்ச் ஆனது. அந்த நேரத்தில் பந்தை பிடித்த அவர் உடனடியாக வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முயல, பந்து கையை விட்டு நழுவி விட்டது. பின்பு எல்பிடபிள்யூக்கு ரிவியூ செய்த பொழுது, பந்து கிளவ்வில் பட்டது தெரியவந்தது. ஸ்டோக்ஸ் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட, ஆசஸ் தொடரை சமன் செய்யும் வாய்ப்பு கடினமானதோடு, தொடரை இழக்கவும் ஒரு வாய்ப்பு உருவாகிவிட்டது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 68 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்தது. அந்த நேரத்தில் கேப்டன் ஸ்டீவ் வாக் தந்த ஒரு எளிய கேட்சை, பென் ஸ்டோக்ஸ் அவசரப்பட்டு கொண்டாடப்போய் விட்டதுபோல கிப்ஸ் தவறவிட்டு இருப்பார்.

அந்தப் போட்டியில் ஸ்டீவ் வாக் அரை சதம் எடுத்துக் கொடுக்க, அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெல்வதற்கு அது மிகப்பெரிய முக்கிய காரணமாக அமைந்தது. இன்று வரையில் அன்று கிப்ஸ் விட்டது கேட்ச்சை அல்ல உலகக் கோப்பையை என்று சொல்லுவார்கள். அதே போல் இன்று ஸ்டோக்ஸ் விட்டது கேட்ச்சை அல்ல ஆசஸ் தொடர் வெற்றியையா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.