விராட் ரோஹித் இடத்தை நிரப்ப.. இவங்க 2 பேர்தான் பெஸ்ட் சாய்ஸ்.. அதுக்கு காரணம் இருக்கு – பியூஸ் சாவ்லா பேட்டி

0
34

சமீபத்தில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெற்றி பெற்றதோடு டி20 வடிவத்தில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களது ஓய்வை அறிவித்து ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் மட்டும் விளையாடி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரும் அனைத்து வடிவங்களிலும் இருந்து ஓய்வு பெற்றால் எதிர்காலத்தில் இவர்களது இடத்தை நிரப்ப இந்தியாவின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா இரண்டு வீரர்களை தேர்வு செய்து அதற்கான காரணத்தை கூறுகிறார்.

- Advertisement -

இந்திய அணியின் மகத்தான வீரர்களாக தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்திய அணிக்காக ஏராளமான சாதனைகளை செய்துவிட்டு டி20 தொடரில் தற்போது தங்களது ஓய்வினை அறிவித்திருக்கின்றனர். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் 35 வயதுக்கு மேல் அதனால் அவர்களால் சில வருடங்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட முடியும்.

இந்த சூழ்நிலையில் அவர்களது இடத்தை நிரப்புவதற்கு தகுந்த வீரர்கள் யார்? என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பியூஸ் சாவ்லா அவர்களது இடத்தை நிரப்ப சுப்மான் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சிறந்த தேர்வாக இருப்பார்கள் என்று அதற்கான காரணத்தையும் விரிவாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சுப்மான் கில் அவரது பேட்டிங் தொழில்நுட்பம் சிறப்பானது. ஒரு சிறந்த வீரர் பேட்டிங் ஃபார்ம் அவுட்டில் இருக்கும் போதெல்லாம் தனது சிறந்த பேட்டிங் தொழில்நுட்பத்தால் விரைவிலேயே பார்முக்கு வர முடியும். நல்ல பேட்டிங் தொழில்நுட்பம் கொண்ட எந்த ஒரு வீரரும் பேட்டிங் பார்மில் இருந்து அவ்வளவு எளிதில் வெளியேற முடியாது. கில் அத்தகைய வகையைச் சேர்ந்த ஒரு வீரர்தான். எனவே கில் மற்றும் ருத்ராஜை நான் தேர்வு செய்கிறேன்.

அணியில் இருந்து நீக்கம் மற்றும் காயமடைதல் இவை எல்லாம் விளையாட்டின் ஒரு பகுதி ஆகும். இருப்பினும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் அவர்களது இடத்தை நிரப்ப இந்த இருவரும் சிறப்பானவர்கள்” என்று பியூஸ் சாவ்லா கூறியிருக்கிறார். கில் ஏற்கனவே இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சச்சின் தோனி இல்லை.. வாழ்நாள் முழுவதும் இந்த வீரருடன் பேட்டிங் செய்ய விரும்பறேன் – யுவராஜ் சிங் தேர்வு

அதே நேரத்தில் மற்றொரு சிறப்பான வீரரான ருத்ராஜ் வாய்ப்பு கிடைத்த ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தற்போது நடந்து வரும் துலீப் டிராபி தொடரிலும் தனது திறமையை வெளிக்காட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இவரும் இந்திய அணியில் விரைவில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -