கம்பீரை நினச்சா ஆச்சரியமா இருக்கு.. ஆஸி ஞாபகம் இல்லையா.. இந்த 2 வீரர்கள் ஏன் இல்ல – பாக் பசித் அலி வியப்பு

0
120
Gambhir

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் சீசன் சிவப்பு பந்து வடிவத்தில் நடத்தப்படும் துலீப் டிராபி மூலம் ஆரம்பிக்கும். இந்த நிலையில் இந்த தொடரில் சில முக்கிய வீரர்கள் இல்லாதது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர வந்த பிறகு அவருடைய சிந்தனை செயல்பாடுகள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கக் கூடியதாக இருந்து வருகிறது. மிகக் குறிப்பாக சிவம் துபேவை இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தேர்வு செய்தது, தற்போது துலீப் டிராபியில் தேர்வு செய்திருப்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிக சிறப்பான புள்ளி விபரங்களை மூன்று வடிவத்திலும் வைத்திருக்கும் ரிங்கு சிங் துளிப் டிராபி அணிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். மேலும் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

அருகில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இருக்கும் பொழுது பயிற்சியாளராக கம்பீர் சிந்தனை முறை தனக்கு ஆச்சரியம் தருவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரிங் சிங்கை பார்த்த பிறகும் கூட அவரை தேர்வு செய்யாதது ஆச்சரியம் அளிப்பதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பசித் அலி கூறும் பொழுது “துலீப் டிராபி அணிகளை பார்த்தேன். அதில் மூன்று நான்கு வீரர்கள் இல்லாதது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ரகானே மற்றும் புஜாரா இருவரும் இல்லை. அதேபோல் சஞ்சு சாம்சன் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இல்லை. அதே சமயத்தில் சிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவரை ஒரு ஆல் ரவுண்டராக உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இதையும் படிங்க : டெஸ்ட் அணியா இங்கிலாந்துக்கு இது அவமானம்.. ஒழுங்கா பொறுப்பை எடுங்க – ஸ்டூவர்ட் பிராட் பேச்சு

வருகின்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் புஜாராவை நல்ல முறையில் பயன்படுத்தி இருக்க முடியும். இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் இருந்தும் புஜாரா இல்லாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதேபோல் ரிங்கு சிங் இல்லாததும், கம்பீரைக் காரணியாக வைத்து எனக்கு இன்னொரு ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -