கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் துவங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் யார் அதிக ரன்கள் குவிப்பார்கள் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கணித்திருக்கிறார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் வழக்கம் போல் இல்லாமல் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. மேலும் இரண்டு சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கடுத்து அரையிறுதி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால் பல சிறிய அணிகள் உள்ளே வருவதால் பெரிய அணிகளுக்கு ஏதாவது அப்செட் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் சிறிய அணிகள் அதிகம் இருப்பதால் பேட்ஸ்மேன்கள் அதிகம் ரன்கள் குவிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு பேட்ஸ்மேன் அதிகபட்ச ரன்கள் குவிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இதுவரை நடைபெற்றுள்ள ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பை தொடர்களில் சேர்த்து அதிக ரன்கள் குவித்தவராக விராட் கோலி இருந்து வருகிறார். மேலும் ஆச்சாரியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரிலும் அவரே அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் ஆகவும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் அவரே அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் ஆக இருந்தார்.
இந்த நிலையில் இந்த டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் யார் குவிப்பார்கள் என ஸ்மித் கூறும் பொழுது “இந்த டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குறிக்கக்கூடிய எனது பேட்ஸ்மேன் விராட் கோலி. அவர் ஒரு பயங்கரமான ஐபிஎல் தொடரில் இருந்து வருகிறார். மேலும் சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். மேலும் அவரே முன்னணி எடுப்பவராகவும் இருப்பார்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : நீங்க நினைக்கிற மாதிரிலாம் விராட் கோலி செய்ய முடியாது.. அவர் இப்படித்தான் போவார் – சஞ்சய் பாங்கர் பேட்டி
மேலும் இதே நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறும் பொழுது ” இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிக்கக்கூடிய பேட்ஸ்மேன் ஆக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் உடன் செல்கிறேன். ஒன்று அவர் விராட் கோலியாக இருப்பார் இல்லை ஜோஸ் பட்லர்” என்று கூறியிருக்கிறார்.






