இந்திய அணியில் இவர் எங்க ஆளு.. இவருக்கு ஆஸி மைண்ட் செட்.. நாங்க மெசேஜ் பண்ணிப்போம் – ஸ்மித் பேட்டி

0
547
Smith

இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் துவங்க நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இந்திய வீரர்கள் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். மேலும் நடக்க இருக்கும் டெஸ்ட் தொடரில் தான் விளையாட விரும்பும் விதம் குறித்தும் கூறியிருக்கிறார்.

தற்போதைய காலகட்டத்தில் சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களாக குறிப்பிடப்படுபவர்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தும் ஒருவர். இதே போல இந்த பட்டியலில் உச்சத்தில் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி இருக்கிறார். எனவே இவர்கள் இருவரும் ஒரே தொடரில் மோதிக் கொள்வது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

ஸ்மித்தை வைத்து சுழலும் பார்டர் கவாஸ்கர் டிராபி

தற்போது ஆஸ்திரேலியா டெஸ்ட் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக ஸ்மித் உயர்த்தப்பட்டு விளையாடி வருகிறார். ஆனால் அங்கு அவருடைய ஆட்டம் நிலையானதாக வழக்கம் போல் இல்லை. புதிய பந்தை சந்திப்பதால் விக்கெட்டை இழக்கும் அபாயம் அவருக்கு அதிகம் இருக்கிறது.

இதன் காரணமாக மிடில் வரிசையில் மிகச் சிறப்பாக விளையாடும் ஒரு வீரரை ஆஸ்திரேலியா இழந்து விடுகிறது. இது எதிரணிக்கு கூடுதல் லாபத்தை கொடுக்கிறது. எனவே இந்திய அணிக்கு எதிராக ஸ்மித்தை எந்த இடத்தில் பயன்படுத்துகிறார்கள்? என்பதுதான் நடக்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முக்கிய அம்சமாக இருக்கிறது.

- Advertisement -

இவர் எங்களை மாதிரி

இந்த நிலையில் தன்னுடைய சக போட்டியாளர் விராட் கோலி பற்றி ஸ்மித் கூறும் பொழுது “விராட் கோலி செயல் மற்றும் எண்ணங்களில் ஒரு ஆஸ்திரேலியர் போல இருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன். அவர் களத்தில் மோதலில் ஈடுபடும் விதம், சவால் விட்டு நெருக்கடியில் இருந்து எதிர் அணியை விட மேலே வரும் விதத்தில் அவர் ஆஸ்திரேலியா வீரர்கள் போல இருக்கிறார்.

உண்மையில் விராட் கோலியை தாண்டி வெல்ல வேண்டும் என்று நான் எதுவும் நினைப்பது கிடையாது. நான் சென்று விளையாடி எப்படி அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியது.மேலும் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைப்பது குறித்து செயல்படுவது.

இதையும் படிங்க : என்னோட அந்த கிரிக்கெட் முடிஞ்சிடுச்சு.. என் எதிர்காலம் 2 வருஷம் கழிச்சு தெரியும் – நடராஜன் பேட்டி

நானும் விராட் கோலியும் நன்றாக பழகிக் கொள்கிறோம். அவ்வப்போது செய்திகளை பகிர்ந்து கொள்கிறோம். அவர் ஒரு சிறந்த மனிதர் மற்றும் அற்புதமான வீரர். இந்தக் கோடைகாலத்தில் அவருக்கு எதிராக விளையாட இருப்பது மிகவும் சிறப்பான ஒன்று” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -