இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது ஜெய்ஸ்வால் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் அந்த ரன் அவுட் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவிக்க அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா இந்த முறையும் நிலைத்து நின்ற விளையாடாமல் வெறும் 3 ரன்னில் வெளியேறினார். அதற்குப் பிறகு களமிறங்கிய கேஎல் ராகுல் 24 ரன்னில் வெளியேற பின்னர் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பாக விளையாடியது.
மூன்றாவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி 102 ரன்கள் குவித்த நிலையில் 82 ரன்கள் குவித்திருந்த ஜெய்ஸ்வால் போலன்ட் வீசிய ஒரு பந்தில் சிங்கிள் எடுக்க முயற்சித்து க்ரீசை விட்டு வெளியே பாதி தூரம் ஓடி வர இரண்டு அடி எடுத்து வைத்திருந்த விராட் கோலி திரும்பவும் தனது க்ரீஸ் லைனை அடைந்தார். இதனால் ஜெயஸ்வால் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்த நிலையில் விராட் கோலி தான் ஜெய்ஸ்வாலை ரன் அவுட் செய்து விட்டார் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வெளி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் அந்த நிகழ்வு குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
உண்மையில் நடந்தது இதுதான்
இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறும் போது ” ஜெய்ஸ்வால் அந்த பந்தில் சிங்கிள் எடுக்க முயற்சித்து எதிர் முனையில் விராட் கோலியை வா என்று அழைத்தார். ஆனால் விராட் கோலி வேண்டாம் என்று ஜெய்ஸ்வாலை திரும்ப அனுப்ப முயற்சிக்க அதற்கு மேல் என்ன நடந்தது என்று நான் பார்க்கவில்லை. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்த ஒரு தருணம் அது. அதற்குப் பிறகு இரண்டு விக்கெட்டுகள் எங்களுக்கு கிடைத்தது.
இதையும் படிங்க:விராட் ஜெய்ஸ்வால் எங்களுக்கு தந்தது.. நான் பார்த்ததுல சிறந்த பார்பிக்யூ – நாதன் லயன் கருத்து
நான் கடைசி ஒரு மணி நேரம் எங்களுக்கு பெரிய திருப்பமாக அமைந்தது. எனவே என்னை பொறுத்தவரை கடைசி ஒரு மணி நேரம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். தற்போது தனது முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்து இருக்கிறது. இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.






