அம்பயருக்கு ரூல்ஸ் சொல்லிக்கொடுத்த ஸ்மித் – வீடியோ இணைப்பு!

0
164
Smith

வருகின்ற அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக உலக கிரிக்கெட் அணிகள் டி20 போட்டிகளில் அதிகம் விளையாடிக்கொண்டிருக்க, உலகக் கோப்பையை நடத்தும் ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் போட்டி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணியுடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. இதற்கடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட வந்துள்ள நியூசிலாந்து அணியுடன் தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 0 என முன்பே ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி விட்டது. இன்று இந்த ஒருநாள் தொடரின் கடைசி போட்டி நடந்து வருகிறது. மேலும் இந்தப் போட்டி ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ஞ்க்கு கடைசி ஒரு நாள் போட்டி கிரிக்கெட் ஆகும். அவர் இந்த போட்டியோடு சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தில் அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் சவுதி இடம் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

இதையடுத்து களத்திற்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தனது வழக்கமான நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தி அபாரமாக சதம் அடித்தார். இந்தப்போட்டியில் 38வது ஓவரை நீஸம் வீசும் பொழுது, அப்பொழுது தவறுதலாக உள் வட்டத்திற்கு வெளியே ஒரு ஃபீல்டர் அதிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை ஸ்டீவன் ஸ்மித் கண்டுபிடித்திருக்கிறார். ஆனால் அதை அவர் வெளியே காட்டிக் கொள்ளாமல், வீசப்பட்ட அந்த பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்து விட்டு, பந்து காற்றில் இருக்கும் போதே, அம்பயரிடம் அந்த தவறை சுட்டிக்காட்டி நோ பால் வழங்கவேண்டும் என்று கேட்டார்.

அவரது இந்த விளையாட்டு விழிப்புணர்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து செய்தி வெளியிடப்பட்டு வீடியோவும் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -