இந்திய கிரிக்கெட்

விராட் கோலிகிட்ட ஸ்மித் அப்பாவே அந்த வேலையை செய்யணும்.. பாபரால் அவமானம் இல்லை – பசித் அலி பேட்டி

ஆஸ்திரேலிய டி20 தொடர் பிக்பேஷ் லீக்கில் பாபர் அசாமுக்கு சிங்கிள் தராமல் ஸ்மித் அவமானப்படுத்தி விட்டார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பஷீத் அலி பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்த தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருக்கிறார். ஆஸ்திரேலிய மண்ணில் அவரால் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை செலுத்தாமல் திணறி வருகிறார்.

ஸ்மித் செய்த காரியம்

இதில் நேற்று மந்திரம் நடைபெற்ற ஒரு போட்டியில் 11ஆவது ஓவரின் கடைசிப்பந்தில் பாபர் அசாம் ஒரு சிங்கிள் ரன்னுக்கு பந்தை தட்டினார். ஆனால் ஸ்மித் அந்த சிங்கிள் ரன் வேண்டாம் என நின்று விட்டார். இது பாபர் அசாமுக்கு மிகுந்த அவமானமாக களத்தில் அமைந்துவிட்டது.

அதே சமயத்தில் ஸ்மித் அடுத்த ஓவரில் மட்டும் மொத்தம் 32 ரன்கள் குவித்தார். மேலும் 42 பந்தில் நூறு ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறவும் வைத்தார். இந்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியே சென்ற பாபர் அசாம் பவுண்டரி லைனை கோபமாக அடித்து விட்டு வெளியேறினார்.

- Advertisement -

ஸ்மித் அப்பாவே இதை செய்யணும்

இதுகுறித்து பேசி உள்ள பசித் அலி கூறும் பொழுது ” பாபர் உங்கள் விளையாட்டின் மூலம் நீங்கள் உங்கள் மரியாதையை குறைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மாறிவரும் டி20 கிரிக்கெட் உங்களை தயார் படுத்திக் கொள்ளவில்லை. இதனால் பாகிஸ்தானுக்கு எந்த அவமானமும் வராது. ஏனென்றால் பாபரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலியாவிற்கு விளையாட அனுப்பவில்லை. அவராகத்தான் விளையாடுவதற்கு சென்றார்”

இதையும் படிங்க: U19 உலகக்கோப்பை.. வைபவ் சூரியவன்சி உலக சாதனை.. பங்களாதேஷ் அணியை வென்றது இந்தியா.. சிறப்பான பதிலடி

“அடுத்த ஓவரில் ஸ்மித் ஆறு சிக்ஸர்கள் அடிபார் என்பது போல எனக்கு தோன்றியது. அவர் அந்த ஓவரை மிகச் சிறப்பாக பயன்படுத்தி விளையாடினார். மேலும் பாபர் இடத்தில் விராட் கோலி இருந்து ஒரு ரன்னை எடுக்க விரும்பி இருந்தால், மித் அப்பாவே உடன் விளையாடியிருந்தாலும் அந்த ஒரு ரன்னை எடுத்து இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by