4-1 இருக்கட்டுமே.. எங்க இங்கிலாந்து பாஸ்பாலை இந்தியாவால் எதுவுமே செய்ய முடியல.. இதான் காரணம் – ஹார்மிஷன் பேட்டி

0
651
Harmison

இந்த வருடத்தில் ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரை இந்திய அணி 4-1 எனக் கைப்பற்றியது. ஆனாலுமே இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறையை இந்தியாவால் எதுவுமே செய்ய முடியவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிஷன் கூறியிருக்கிறார்.

இந்த குறிப்பிட்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒல்லி போப் அதிரடி பேட்டிங் காரணமாகஇங்கிலாந்து அணி வென்று அதிர்ச்சி கொடுத்தது. இதை இங்கிலாந்து முன்னாள் வீரர்களே எதிர்பார்க்கவில்லை. மேலும் இந்திய அணி போட்டியில் அதிக நாட்கள் முன்னிலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், அறிமுக வீரர்களாக வந்த துருவ் ஜுரல், சர்பராஸ் கான் ஆகியோரது சிறப்பான பேட்டிங் மற்றும் பும்ரா, அஸ்வின் ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சால் ஆதிக்கம் செலுத்தி தொடரை வென்றது.

அதே சமயத்தில் இங்கிலாந்து தோற்ற நான்கு போட்டிகளிலுமே அந்த அணிக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தன. ஆனால் அவர்கள் அதிரடியாகத்தான் விளையாடுவேன் என முடிவு செய்து விளையாடி தங்களுக்கு தாங்களே பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்த வகையில் அவர்களுடைய அதிரடி பேட்டிங் முறையான பாஸ்பால் முறை இந்தியாவில் தோல்வி அடைந்த ஒன்றாகத்தான் இருக்கிறது.

- Advertisement -

இது குறித்து பேசி இருக்கும் ஸ்டீவ் ஹார்மிஷன் கூறும் பொழுது “இங்கிலாந்து இந்தியாவில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடினார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பல நேரங்களில் இந்திய அணிக்கு தலைவலியை கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் நல்ல நிலையில் இருந்து திடீரென கொத்துக் கொத்தாக விக்கெட்டை கொடுத்ததுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஒரு டெஸ்ட் அணியாக நீங்கள் சிறந்த எல்லாவற்றையும் வைத்திருக்க முடியாது. இந்தியாவில் இதற்கு முன் விளையாடிய அணிகளை விட இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது

இதையும் படிங்க : 198 ரன்.. யூனுஸ் கான் அதிரடியில் பாகிஸ்தான் பைனலுக்கு தகுதி.. வெஸ்ட் இண்டீஸ் போராடி வெளியேறியது

இந்தியா இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறையை கொல்லவில்லை. மாறாக இந்தியா அவர்களின் சொந்த மைதானத்தில் சிறப்பான கிரிக்கெட் விளையாடியதாகவே நினைக்கிறேன். அழுத்தத்தின் கீழ் அவர்கள் சிறந்த முடிவுகளை எடுத்தார்கள். ஆனால் ஐந்து டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து நல்ல சவாலை கொடுத்தது. இந்தியாவில் இந்திய அணிக்கு மற்ற அணிகள் இதைச் செய்யவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -