கம்மின்ஸ் சாதனையை 1மணி நேரத்தில் உடைத்த ஸ்டார்க்.. ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா ரெக்கார்ட் பிரேக்!

0
513

இன்று துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் மினி ஏலம், பல புதிய உயரங்களை தொட்டு கிரிக்கெட் உலகில் ஆச்சரியங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.

ஐபிஎல் ஏல வரலாற்றில் முதல் முறையாக வெளிநாடு ஒன்றில் துபாயில் வைத்து தற்பொழுது முதல்முறையாக நடத்தப்படுகிறது. மேலும் இந்த ஏலம் முதல்முறையாக ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

- Advertisement -

இப்படி சில சிறப்புகளுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் மினி ஏலத்தில், எதிர்பார்த்த வீரர்கள் மிகவும் குறைந்த தொகைக்கும், எதிர்பாராத வீரர்கள் மிகப் பெரிய தொகைக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள்.

மேலும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்சை 20.50 கோடி ரூபாய் கொடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இடம் போட்டியிட்டு வாங்கியது.

இந்த ஏலத்தில் இதற்கு மேல் ஒரு வீரரை இவ்வளவு தொகைக்கு சென்று யாரும் வாங்க மாட்டார்கள் என்று எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அதை கொல்கத்தா மற்றும் குஜராத் இரண்டு அணிகளும் மாற்றி எழுதி இருக்கின்றன.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் தன்னுடைய அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு வந்தார். ஆரம்பத்தில் அவருக்கு ஏலத்தில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. டெல்லி அணி சார்பில் ரிஷப் பண்ட் ஏலம் கேட்டார்.

இந்த நிலையில் ஸ்டார்க் மீது ஏலத்தில் இருந்து டெல்லி மற்றும் மும்பை அணிகள் விலகிய நிலையில், 31.85 கோடி வைத்திருந்த குஜராத், 31.70 கோடி வைத்திருந்த கொல்கத்தா இரண்டு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன.

இவர்கள் இருவரும் 15 கோடியை முதலில் தாண்டி, அடுத்த 20 கோடியை தொட்டு விடாமல் மோதி ஸ்டார்க்கை கைப்பற்ற பெரிய போரை ஏலத்தில் நடத்தினார்கள். மிக அதிக நேரம் நடைபெற்ற ஏலமாகவுமே இது அமைந்திருக்கும். ரசிகர்கள் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றார்கள்.

இறுதியாக கொல்கத்தா அணி 24.75 கோடிக்கு ஸ்டார்க்கை கேட்டு நிறுத்தியது. இந்த நேரத்தில் குஜராத் மிகவும் யோசித்து, கடைசியாக இதற்கு மேல் வேண்டாம் என்று விலகிக் கொண்டது.

இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக விலைக்கு ஏலம் போனவராக ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் மாறி இருக்கிறார்.

மேலும் தனது சகநாடடவரான பேட் கம்மின்ஸ் படைத்திருந்த சாதனையை சில மணி நேரங்களில் முறியடித்தார். கொல்கத்தா அணி ஐபிஎல் ஏல வரலாற்றில் புதிய சாதனைக்கு வித்திட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது,