ஐபிஎல் தொடரின் முக்கிய நேரத்தில் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய பேட் கம்மின்ஸ் – காரணம் இதுதான்

0
113

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் மட்டும் வெற்றி கண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு போராடிக் கொண்டிருக்கிறது. அந்த அணி மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

அப்படியே கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து தான் கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லுமா அல்லது செல்லாதா என்பதை நம்மால் உறுதிப்படுத்த முடியும். இந்நிலையில் அந்த அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் பேட் கம்மின்ஸ் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

- Advertisement -

இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கம்மின்ஸ் வெளியேறல்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சர்வதேச போட்டிகளை முடித்தபின்னர் பேட் கம்மின்ஸ் கொல்கத்தா அணியுடன் கலந்து கொண்டார். வந்த முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 15 பந்துகளில் 56* ரன்கள் குவித்து கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்தார்.

ஆனால் அதன் பின்னர் நடந்த மூன்று போட்டிகளையும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாட காரணத்தினால் நிறைய போட்டிகளில் இவர் வெளியே அமர்த்தப்பட்டார். சமீபத்தில் கடந்த 9ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மீண்டும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். நல்ல பார்மில் மீண்டு வந்த சமயத்தில் தற்பொழுது அவர் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
அவருடைய காயம் குணமாக ஒரு சில வாரங்கள் எடுத்துக்கொள்ளும் என்பதால் அவர் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறி சிட்னிக்கு சென்றுவிட்டார்.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் களமிறங்குவார்

ஜூன் 7-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் அதன் பின்னர் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கின்றது.

பேட் கம்மின்ஸ் டி20 தொடரில் களமிறங்கி விளையாடுவது சந்தேகமே. இருப்பினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்கிற செய்தி தற்போது உறுதியாகியுள்ளது.