IND vs BAN.. துபாய் மைதான வரலாற்று புள்ளி விவரங்கள்.. ஆடுகளம் எப்படி இருக்கும்?.. வானிலை அறிக்கை

0
1127
ICT

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கான வானிலை அறிக்கை மற்றும் மைதான புள்ளி விபரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா பங்களாதேஷ் அணிகள் சாம்பியன் டிராபி தொடரின் இரண்டாவது போட்டியில் பிப்ரவரி 20ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்தியா இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதையும் துபாய் மைதானத்தில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

துபாய் மைதான புள்ளி விபரங்கள்

சமீபத்தில் இங்கு ஐஎல்டி டி20 லீக் நடைபெற்று முடிந்தது. இங்கு போட்டியின் இரண்டாவது கட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. தற்போது துபாயில் இயல்பாக குளிர்காலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணத்தினால் வேகப்பந்துவீச்சுக்கு சுழல் பந்துவீச்சை விட அதிக சாதகம் காணப்படுகிறது.

மேலும் இங்கு கடைசியாக நடைபெற்றுள்ள 10 ஒரு நாள் போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி ஒன்பது முறை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை குளிர்காலத்தில் இரண்டாவது பந்து வீசும் பொழுது பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்திய அணி துபாயில் டி20 வடிவத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

பொதுவான வானிலை

இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நாளில் மழை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. குளிர்காலம் என்பதால் இயல்பான பனிப்பொழிவு இரவில் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ஆரம்ப கட்டத்தில் இரவில் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். பந்து தேய்ந்த பிறகு பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாறும்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு 10 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது.. இருண்ட காலம் – இன்சமாம் வேதனை

தற்போது சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் மொத்தம் ஐந்து சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் மொத்தமாக மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார்கள். மூன்று பேருமே விளையாட வேண்டிய சூழ்நிலை வந்தால், இவர்களுக்கு மாற்று வீரர் 15 பேர் கொண்ட அணியில் இல்லை என்பது மட்டுமே தற்பொழுது பின்னடைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -