பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருப்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்கள் இன்சமாம் உல் ஹக் மற்றும் மிஸ்பா உல் ஹக் இருவரும் மனம் திறந்து பேசி இருக்கிறார்கள்.
நாளை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் ஆரம்பிக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இது தொடர்ந்து தொடரின் இரண்டாவது நாள் துபாயில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.
பாகிஸ்தானில் நடந்த மோசமான சம்பவம்
இலங்கை அணி 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இருக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருந்தது. அப்பொழுது அந்த அணியின் மீது தாக்குதல் நடந்தது. அதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் உலகம் அதற்கு அடுத்து பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவதை உடனடியாக நிறுத்திக் கொண்டன. பாகிஸ்தான் பாதுகாப்பற்ற நாடு என்று வெளியில் பரவியது.
இதற்கு அடுத்து 2019 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்தது. இடைப்பட்ட 10 ஆண்டுகள் பாகிஸ்தானுக்கு எந்த அணிகளும் கிரிக்கெட் விளையாடுவதற்கு வரவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தான் மேல் நம்பிக்கை வர பெரிய நாடுகளான நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சுற்றுப்பயணங்கள் செய்ய தற்போது ஆரம்பித்திருக்கின்ற.
10 ஆண்டுகள் தண்டனை
இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறும்பொழுது “இப்போது பாகிஸ்தானில் பள்ளிகள் வீடுகள் மற்றும் சந்தைகள் என எங்கு பார்த்தாலும் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து மக்கள் ஆர்வமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 2009 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் ஒரு கெட்ட கனவு. அது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு 10 ஆண்டுகள் மிகப்பெரிய தண்டனையாக அமைந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : டேவிட் வார்னருக்கு இந்த நிலையா? வாய் விட்டு வேதனையை பகிர்ந்து கொண்ட டேவிட் வார்னர்.. என்ன நடந்தது?
பாகிஸ்தான் இந்திய அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி குறித்து பேசி இருக்கும் மிஸ்பா உல் ஹக் கூறும்பொழுது ” இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இளம் நட்சத்திர வீரர்கள் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேரடியாக விளையாடுவதை பார்ப்பது பெரிய விஷயம். இது இல்லை என்றால் கிரிக்கெட் இயந்திரம் ஸ்தம்பித்து விடும். இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்வது வெறும் போட்டி கிடையாது. இது மிகப்பெரிய நிகழ்வு பெரிய, எதிர்பார்ப்பு மற்றும் உணர்ச்சி குவியல்” என்று கூறியிருக்கிறார்.