தீக்சனா, தனஞ்செயா அபாரம்… நெதர்லாந்தை அடக்கி இலங்கை அணி த்ரில் வெற்றி!

0
439

உலகக்கோப்பை குவாலிபயர் சுற்றில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றுள்ளது இலங்கை அணி. தனஞ்செயா டீ சில்வா மற்றும் மகிஷா தீக்ஷனா இருவரும் அபாரமாக செயல்பட்டதால் இந்த வெற்றி சாத்தியமானது.

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை குவாலிபயரில் சூப்பர் சிக்ஸ் சுற்று நடைபெற்று வருகிறது. இன்று நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறோம் என்று அறிவித்து களம் இறங்கியது. துவக்க வீரர் பத்தும் நிஷன்கா எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகினார். மற்றொரு துவக்க வீரர் கருணரத்தினே 33 ரன்கள், குஷால் மெண்டிஸ் 10 ரன்கள், சமரவிக்ரமா 1 ரன், அசலங்கா 2 ரன்கள் என இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டம் இழந்து வெளியேற இலங்கை அணி தடுமாற்றம் கண்டது.

உள்ளே வந்த தனஞ்செயா டி சில்வா ஒரு பக்கம் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மற்றொரு பக்கம் ஹசரங்கா 20 ரன்கள், தீக்ஷனா 28 ரன்கள் அடித்து ஆங்காங்கே பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இறுதியில் இலங்கை அணி 200 ரன்களை கடந்தது. சிறப்பாக விளையாடி வந்த தனஞ்செயா டீ சில்வா 93 ரன்கள் அடித்திருந்தபோது துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார்.

47.4 ஓவர்களில் இலங்கை அணி 213 ரன்கள் மட்டுமே அடுத்து ஆல் அவுட் ஆனது. டீ லீட் மற்றும் வான் பீக் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

- Advertisement -

214 ரன்கள் இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு துவக்க வீரர் விக்ரம்ஜித் சிங் மற்றும் ஒட்வாட் இருவரும் டக்கவுட்டாகி பேரதிர்ச்சியை கொடுத்தனர். மூன்றாவது விக்கெட்டிற்கு பர்ரேஷி மற்றும் டி லீட் இருவரும் ஜோடி சேர்ந்து 77 ரன்கள் சேர்த்தனர். பர்ரேஷி 52 ரன்கள், டி லீட் 41 ரன்கள் அடித்து அவுட்டாகினர்.

பின்னர் கேப்டன் எட்வார்ட்ஸ் கடைசி வரை ஒரு பக்கம் நின்று போராடினாலும், மறுபக்கம் வந்தவர்கள் வரிசையாக அவுட்டாகினர். கேப்டன் எட்வார்ட்ஸ் 67 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆனால் நெதர்லாந்து அணி 40 ஓவர்களுக்கு 192 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தீக்சனா 3 விக்கெட்டுகள் எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஹசரங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.