105 ரன்களில் நெதர்லாந்தை பொட்டலம் கட்டி உலகக்கோப்பை தகுதி சுற்று கோப்பையை வென்றது இலங்கை அணி!

0
400

2023 ஆம் ஆண்டின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் வைத்து நடைபெற்றது . பத்து அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றதோடு இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றன .

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 47.5 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களை மட்டுமே எடுத்தது . அந்த அணியின் சகான் அரசிகே 57 ரன்களையும் குஷால் மெண்டிஸ் 43 ரண்களையும் சரித் அசலங்கா 37 ரன்களையும் எடுத்தனர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து அணி 23.3 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 128 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி மிகப்பெரிய வெற்றியை பெற்று உலகக்கோப்பை தகுதி சுற்று கோப்பையை வென்றது . இலங்கை அணியின் பந்துவீச்சில் தீக்ஷனா நான்கு விக்கெட்டுகளையும் தில்ஷான் மதுஷங்க்கா மூன்று விக்கெட்டுகளையும் ஹசரங்கா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய நெதர்லாந்து அணி இரண்டு முறையும் இலங்கை அணி இடம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் இருந்து ஜிம்பாவே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற பலம் மிகுந்த அணிகள் வெளியேறிய நிலையில் நெதர்லாந்து அணி தகுதி பெற்று இருக்கிறது .

ஜூன் மாதம் 18ம் தேதி துவங்கிய போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தது . இந்தப் போட்டி தொடரில் அதிகபட்சமாக ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சியான் வில்லியம்ஸ் 600 ரன்கள் எடுத்திருக்கிறார் அவருக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் பத்தும் நிசாங்கா 417 ரன்கள் எடுத்துள்ளார். மூன்றாவது இடத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் கருநரத்தினே 369 ரன்கள் உடன் இருக்கிறார் .

- Advertisement -

பந்துவீச்சிலும் இலங்கை அணியே முன்னிலை வகிக்கிறது அந்த அணியின் பணிந்து ஹசரங்கா 22 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும் மகேஷ் தீக்ஷனா 21 விக்கெட் களுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர் . மூன்றாவது இடத்தில் நெதர்லாந்து அணியின் ஆல் ரவுண்டர் பஸ் டி லீட் 15 ரன்கள் உடன் இடம் பெற்றுள்ளார்.