இந்த அவமானத்துக்கு காரணம் கம்பீர் சூர்யாதான்.. பாண்டியாவுக்கு இதை செய்யலாமா.. பைத்தியக்காரத்தனம் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
22
Srikanth

நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி நிர்வாகம் எடுத்த முடிவுகள் அனைத்தும் பைத்தியக்காரத்தனமானது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் மூன்றாவது இடத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவ் விளையாடுவது சரியான முடிவாக இருந்திருக்கும், அதே சமயத்தில் ஹர்திக் பாண்டியாவை ஏழாவது இடத்தில் அனுப்பி வைத்தது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சூர்யா செய்த தவறு

இதுபற்றி கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும்போது ” இஷான் கிஷான் அவுட் ஆவதற்கு முந்தைய பந்தில் அவுட் ஆகி இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது அவர் அடுத்த பந்தையே சுற்றுகிறார். ரிங்கு சிங் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வந்தாலும் ஒற்றை இலக்கத்தில் மட்டும் தான் ரன் எடுக்கிறார். இரு நாடுகளுக்கு இடையேயான தொடருக்கும் உலகக் கோப்பைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அபிஷேக் ஷர்மா சுத்தமாக நான் ஸ்ட்ரைக்கராகவே மாறிவிட்டார்”

“சூரியகுமார் யாதவ் தொடக்க இடத்தை தவிர மற்ற எதுவுமே நிரந்தரமானது கிடையாது என்று சொல்லி இருந்தார். அப்படி இருக்கும் பொழுது நேற்றைய போட்டியில் வலது கை வீரரான அவர் மூன்றாவது இடத்தில் வந்திருக்க வேண்டும். அப்படி வராமல் பெரிய தவறை செய்து விட்டார். இடது-வலதுகை காம்பினேஷன் என்பதெல்லாம் முட்டாள்தனம். உங்கள் மனநிலை நன்றாக இருந்தால் போதும்”

- Advertisement -

இது பைத்தியக்காரத்தனம்

“நேற்று இந்திய அணி அவமானப்படுத்தப்பட்டது. வழக்கமாக நாம்தான் இப்படி வெற்றி பெற்று மற்ற அணிகளை அவமானப்படுத்துவோம். ஆனால் நமக்கே இது நேற்று நடந்து விட்டது. ஹர்திக் பாண்டியா அழுத்தமான நேரங்களில் ஐந்தாவது இடத்தில் வந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆனால் அவரை ஏழாவது இடத்தில் அனுப்பினார்கள். இது பைத்தியக்காரத்தனம்”

இதையும் படிங்க : நேத்து ரபடாகிட்ட அபிஷேக் நிலைமை என்ன ஆச்சு?.. இதைத்தானே சொன்னேன்.. ப்ளீஸ் இதை செய்யுங்க – அமீர் வேண்டுகோள்

“இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மனநிலை மிகவும் நெகட்டிவ்வாக மாறும். ஏற்கனவே ஒன்று, இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே நன்றாக விளையாடி காப்பாற்றி வந்தார்கள். இந்த போட்டியில் நாம் ஆரம்பத்திலேயே தோற்று விட்டோம். பிறகு சிவம் துபே வந்து ஏதோ சிக்ஸர்கள் அடித்துக் கொண்டிருந்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -