நேத்து ரபடாகிட்ட அபிஷேக் நிலைமை என்ன ஆச்சு?.. இதைத்தானே சொன்னேன்.. ப்ளீஸ் இதை செய்யுங்க – அமீர் வேண்டுகோள்

0
17
Abhishek

பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்.

இதற்கு முன்பாக அபிஷேக் சர்மா பேட்டை சுற்றக்கூடியவர் என்ற வகையில் முகமது அமீர் தெரிவித்த கருத்து பெரிய சர்ச்சையாக மாறியது. தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ள முகமது அமீர் மேலும் அபிஷேக் சர்மா எப்படி விளையாட வேண்டும்? என்பது குறித்து மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்.

- Advertisement -

ஒரு பவுலரா சொன்னேன்

தற்போது இது குறித்து மறு விளக்கம் தந்திருக்கும் முகமது அமீர் தான் ஒரு பவுலர் என்ற பார்வையில் இருந்துதான் அபிஷேக் சர்மா குறித்த கருத்துகளை தெரிவித்ததாகவும், அவரிடம் நல்ல திறமை இருக்கிறது என்றும், ஆனால் அவர் தனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதுகுறித்து முகமது அமீர் பேசும் பொழுது “நான் ஒரு பவுலர் என்ற பார்வையில் இருந்து அவருடைய பேட்டிங் தொழில்நுட்பம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் அவரை ஸ்லாக்கர் என்ற வார்த்தையை பயன்படுத்தி பேசியதால் என்னுடைய கருத்தை மக்கள் மோசமாக பார்த்திருக்கிறார்கள். ஆனால் நான் அவரை மோசமாக கூற வேண்டும் என்று நினைக்கவில்லை”

- Advertisement -

இதை செய்ய வேண்டும்

“ஒரு நல்ல அணி மற்றும் ஒரு நல்ல பவுலர் வந்தால் அபிஷேக் சர்மா தொழில்நுட்பம் சிக்கலுக்கு உள்ளாகும் என்று நான் தெரிவித்திருந்தேன். நேற்று கூட அவர் எடுத்த 14 ரன்களை பாருங்கள். அவர் ஒரே பக்கமாகவே விளையாடினார். ஆனால் ரபாடா சிறப்பாக பந்து வீச ஆரம்பித்ததும் அவருக்கு எப்படி விளையாட வேண்டும்? என்று தெரியவில்லை”

இதையும் படிங்க : இந்திய அணியை தெ.ஆ மைதானத்தில் இழுத்துச் சென்றார்கள்.. பிரமாதமா அவமானப் படுத்திட்டாங்க – சக்லைன் முஸ்டாக் விமர்சனம்

“ஒரு மூத்த வீரராக நான் அவருக்கு என்ன சொல்கிறேன் என்றால், நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் பொழுது உங்களுடைய தொழில்நுட்பம் எதிரணிக்கு தெரிந்து விடும். எனவே நீங்கள் பந்துக்கு தகுந்த வகையில் விளையாட ஆரம்பிக்க வேண்டும். அவரிடம் நல்ல திறமை இருக்கிறது அதை அவர் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை பொறுத்துதான் எல்லாம் அமையும் என்று நான் சொன்னதை மக்கள் தவறாக புரிந்து கொண்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -