நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி மிகவும் மோசமாக உள்ளதாக ஸ்ரீகாந்த் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தங்களது சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 104 ரன்கள் எடுத்து சுருண்டது. மேலும் 103 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது.
ஹர்திக் பாண்டியா சொதப்பல்
இந்தப் போட்டியிலும் ஹர்திக் பாண்டியா பேட்டிங் வந்த பிறகு ரூதர்போர்டு வந்தார். மேலும் நேற்று இறுதி ஓவர்களை வீசுவதற்கு ஹர்திக் பாண்டியா வரவில்லை. அதே சமயத்தில் தனது இரண்டாவது போட்டியில் விளையாடும் இளம் வீரர் ஒருவருக்கு கடைசியில் இரண்டு ஓவர்கள் கொடுத்தார்.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் இளம் வீரர் கிரீஸ் பகத் இருவரும் சேர்ந்து வீசிய நான்கு ஓவர்களில் மட்டும் 69 ரன்கள் போயிருக்கிறது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக குழப்பத்திலும் பயத்திலும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
டப்பா கேப்டன்
“ஹர்திக் பாண்டியா டப்பா கேப்டன்சி செய்கிறார். டி20 உலகக் கோப்பையின் டெத் ஓவர்களில் பந்து வீசும் அளவுக்கு அவர் இருந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் அதைச் செய்ய அவர் வருவதில்லை. கடைசிக் கட்ட ஓவர்களை வீசுவதற்கு அவர் பயந்து கொண்டிருக்கிறார்”
இதையும் படிங்க : சிஎஸ்கே ஜெயிச்சிருந்தாலும் நல்ல டீம் இல்ல.. மும்பை கதையே அவங்களுக்கும் நடக்கும்.. காரணம் இதுதான் – சேவாக் பேட்டி
“மேலும் அவர்கள் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது யாராவது ஒரு வீரர்கள் காப்பாற்றுகிறார்கள். அதுவே அவர்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்பொழுது சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த இடத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யாத போதே ஹர்திக் பாண்டியா சொதப்பிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.






