நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி வெற்றி பெற்று இருந்தாலும் அவர்கள் சிறந்த அணியாக இல்லை என விரேந்தர் சேவாக் கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை விளையாடி 101 ரன்கள் குவித்தார். சிஎஸ்கே ஆறு விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 104 ரன்னில் ஆல் அவுட் ஆனது. சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
சிஎஸ்கே அணியின் பலம் பலவீனம்
சிஎஸ்கே அணி இதுவரையில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் இரண்டு போட்டிகளில் சஞ்சு சாம்சன் சதம் அடித்திருக்கிறார். இன்னொரு போட்டியில் 48 ரன்கள் எடுத்தார். மேலும் இவருக்கு உறுதுணையாக ஆயுஸ் மத்ரே ரன் எடுத்தார்.
இந்த நிலையில் தற்போது ஆயுஸ் காரணமாக அணியில் இருந்து விலகி விட்டார். நேற்றைய போட்டியிலும் சஞ்சு சாம்சன் மட்டுமே ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அவருக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இது வெற்றி பெற்றாலும் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக உள்ளது.
அதே கதை நடக்கும்
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும்போது “நாம் இப்போது சிஎஸ்கே அடியை பாராட்டுகிறோம். ஆனால் அந்த அணியில் ஒரே வீரர் மட்டுமே நன் அடிக்கிறார். அந்த வீரரும் ரன் எடுக்காமல் போனால் மும்பை கதையே அவர்களுக்கும் நடக்கும். ஒரே வீரரை மட்டும் சார்ந்து இருக்க முடியாது. அவர்களுக்கு முன்பு ஆயுஸ் ரன்கள் எடுத்தார். ஆனால் தற்போது அவரும் இல்லை. மற்ற சிஎஸ்கே வீரர்கள் ரன் எடுப்பார்கள் என நம்புகிறேன்”
இதையும் படிங்க : சிஎஸ்கே ஆடிய அதே மண் அதே மைதானம்.. ஆனா நாங்க என்ன செஞ்சோம்?.. எங்க தோல்விக்கு இதான் காரணம் – ஹர்திக் பாண்டியா வருத்தம்
“சாம்சன் 10 ரன்னில் ஆட்டம் இழப்பார் இல்லையென்றால் பெரிய ரன்கள் எடுப்பார். அவருக்கு ஒரு நல்ல துவக்கம் கிடைத்தால் அதை பெரிய ரன்னாக மாற்றுவது சிறந்த விஷயமாக இருக்கிறது. போட்டியில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்ததால் யாராவது நின்று ஆட வேண்டியது இருந்தது. இந்த சூழ்நிலையில் அவர் மிகச் சிறப்பாக கடைசி வரையில் ஆட்டத்தை எடுத்துச் சென்று அழகாக முடித்தார்” என்று கூறியிருக்கிறார்.






