கேகேஆர் இந்த பையன் அடுத்த விராட் கோலி வர முடியும்.. ஆனா அவர்கிட்ட இதை கத்துக்கணும் – சேவாக் அறிவுரை

0
6
Sehwag

நேற்று கேகேஆர் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டி குறித்து இந்திய முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பேசி இருக்கிறார்.

கேகேஆர் அணி தனது முதல் போட்டியில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்த நிலையில் அந்த அணிக்கு இது இரண்டாவது தோல்வியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இரண்டாவது அரைசதம்

கேகேஆர் அணியில் இளம் வீரர் ரகுவன்சி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அரை சதம் அடித்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிரடியாக விளையாடி 27 பந்தில் அரை சதம் அடித்தார். ஆனால் அவர் தொடர்ந்து விளையாட முடியாமல் ரன் அவுட் ஆனார்.

இதுகுறித்து வீரர் சேவாக் பேசும் பொழுது ” ரகுவன்சி மிகவும் நன்றாக விளையாடினார். ஆனால் அவர் இப்படி கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் 18 முதல் 20 ஓவர்கள் என்று விளையாடி இருந்தால் அணி வெற்றி பெற்று இருக்கும். மேலும் நேற்று 65 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருக்கிறார்கள். இந்த ரன் ரேட் பெரிய பாதிப்பை உருவாக்கும்”

- Advertisement -

விராட் கோலியிடம் கற்றுக் கொள்ள வேண்டும்

“நான் எப்போதும் சொல்ல விரும்புவது விராட் கோலி இடம் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் ரன் சேஸ் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள். கடைசி வரை நிலைத்திருந்து உங்கள் அணியை வெற்றி பெற செய்ய வேண்டும். அப்படி ரகுவன்சி செய்திருந்தால் ஒரு நட்சத்திர வீரராக மாறி இருக்க முடியும்”

இதையும் படிங்க : சிஎஸ்கே கேப்டன்ஷிப் சரியில்லை.. 5 முறை சாம்பியன் அணி இந்த மாதிரி நிச்சயம் இருக்காது – முன்னாள் சிஎஸ்கே வீரர் வருத்தம்

“ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்ததால் கேகேஆர் அணி இலக்கை துரத்தி வெற்றி பெற்று இருக்க வேண்டும். மேலும் ஹைதராபாத் அணியின் பௌலிங் யூனிட் மிகவும் பலவீனமாக இருந்ததை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஷாட் செலக்சன் தவறாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -