ரிஷப் பண்ட் செய்த அது மோசமான விஷயம்.. நடராஜன் அல்வா மாதிரி வேலைய முடிச்சிட்டார் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
4
Rishabh

நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ கேப்டன் ரிஷப்மென்ட் துவக்க வீரராக வந்தது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. இதுகுறித்து ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு மிட்சல் மார்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் இருவரும் அதிரடியாக விளையாடி அதிக அளவில் ரன்கள் எடுத்தார்கள். சிறந்த துவக்க ஜோடியாக இருந்தார்கள். இந்த முறை இவர்களை பிரித்தது மோசமான விளைவுகளை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

புரிந்து கொள்ள முடியவில்லை

நேற்று ரிஷப் பண்ட் துவக்க வீரராக வந்தவுடன் அவரால் சரளமாக பேட்டிங் செய்ய முடியவில்லை. மிகவும் சாதாரணமாக ஆரம்பித்து இறுதியில் துரதிஷ்டவசமான ரன் அவுட்டில் சிக்கி ஆட்டம் இழந்தார்.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “லக்னோ அணியில் ஜஸ்டின் லாங்கர் கேன் வில்லியம்சன், டாம் மூடி மற்றும் பாரத் அருண் என பல பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். இத்தனை பேர் சேர்ந்து என்ன திட்டம்தான் தீட்டினார்கள்? இறுதியில் ரிஷப் பண்ட்டை துவக்க ஆட்டக்காரராக கொண்டு வருவதுதான் திட்டமா? எதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்தார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை”

- Advertisement -

நடராஜன் அருமையான வேலை

“நீங்கள் பதோனியை நான்காவது இடத்தில் அனுப்புகிறீர்கள். ஆனால் அவரை டெல்லி எளிதாக அவுட் செய்து அனுப்பிவிட்டது. நடராஜன் அவரை அல்வா மாதிரி அவுட் செய்து அனுப்பி விட்டார். அந்தப் பையன் ஒரு தொடரில் மொத்தமாக 400 ரன்கள் எடுக்கலாம். அந்த மாதிரி எடுக்க இந்தியாவில் பல பேர் இருக்கிறார்கள். ஆனால் அந்த ரன்கள் ஜெயிப்பதற்கு உதவுமா?”

இதையும் படிங்க : நான் ஓபனிங் வர காரணம் எதிர் டீம் கேப்டன் தான்.. அதை மறக்கிறது தான் எனக்கு நல்லது – ரிஷப் பண்ட் பேச்சு

“லக்னா அணிக்கு ஆரம்பத்தில் பந்து வீச்சு பிரச்சனை இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அவர்களுக்கு பேட்டிங் பிரச்சனையும் இருந்தே வருகிறது. அவர்கள் அவ்வளவு சிறந்தவர்களாக இல்லை. ஆட்டத்தை முடிக்க கீழ் வரிசையில் அவர்களுக்கு நல்ல பேட்ஸ்மேன் இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -