நேற்று ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் ரிஷப் பண்ட் துவக்க ஆட்டக்காரராக வந்தார் என்பது. மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் 141 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சில் 24 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி டெல்லி லக்னோவை பயமுறுத்தியது. ஆனால் சமீர் ரிஸ்வி மற்றும் stups இருவரும் சேர்ந்து சிறப்பாக விளையாடி லக்னோ அணியை வெற்றி பெற வைத்தார்கள்.
மறந்துவிட வேண்டும்
இந்த போட்டி குறித்து ரிஷப் பண்ட் பேசும்பொழுது “நான் துரதிஷ்ட முறையில் ரன் அவுட் ஆனேன். ஆனால் இதிலிருந்து மீள்வதற்கு சிறந்த வழி அதை மறந்து விட வேண்டும். இதையெல்லாம் நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. இது குறித்து நீங்கள் யோசித்துக் கொண்டே இருந்தால் அது உங்கள் ஆட்டத்தை பாதிக்கும்”
“நேற்றும் நாங்கள் நீண்ட பார்ட்னர்ஷிப் உருவாக்க முடியவில்லை. நிறைய விக்கெட்டுகளைத் தொடர்ந்து இழந்ததால், இம்பேக்ட் பிளேயராக பந்து வீசக்கூடிய ஒரு பேட்ஸ்மேனை கொண்டு வர வேண்டி இருந்தது. நடு வரிசையில் பதோனி ஆட்டத்தை கட்டுப்படுத்துவார் என்பதால் பூரணுக்கு முன்பாக அனுப்பினோம். ஆனால் எந்த விஷயமும் சரிவர செல்லவில்லை”
ஓபனிங் வர காரணம் இதுதான்
” நான் நேற்று மேல் வரிசையில் துவக்க வீரராக வந்தேன். ஏனென்றால் டெல்லி கேப்டன் அக்சர் படேல் பவர் பிளேவில் பந்து வீச வரும்பொழுது அதை அடித்து விளையாடுவதற்காக இடது கை பேட்ஸ்மேனாக மேலே இருந்தேன். ஆனால் நேற்று அவர் பந்து வீச வருவதற்கு முன்பாகவே நான் ரன் அவுட் ஆகிவிட்டேன்”
இதையும் படிங்க : ரிஷப் பண்டின் பேராசை.. கோயங்காவுக்கு நடந்த சோகம்.. சிஎஸ்கே கண்டெடுத்த வீரர் மாஸ் பேட்டிங் – லக்னாவை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்
“இந்த ஆடுகளத்தில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற முடியாது. இன்னும் ஒரு 20 ரன்கள் எடுத்திருந்தால் விஷயம் மாறி இருக்கும். நாங்கள் அவர்களது ஆரம்ப விக்கெட்டுகளை கைப்பற்றி அழுத்தத்தை உண்டாக்கினோம். எங்கள் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.






