கார்த்திக் சர்மா வேலைக்காகவே மாட்டார்.. இந்த பையனை 4வது இடத்தில் ஆட வைங்க.. இல்லனா பிளே ஆப் போக முடியாது – ஸ்ரீகாந்த் அட்வைஸ்

0
39
Srikanth

சிஎஸ்கே வீரர் கார்த்திக் சர்மாவை நான்காவது இடத்தில் அணி நிர்வாகம் விளையாட வைக்க கூடாது என ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

இன்று லக்னோ அணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடுகிறது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது.

- Advertisement -

கார்த்திக் சர்மா பிரச்சனை

கார்த்திக் சர்மா ஆரம்ப கால ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய பத்ரிநாத் போல விளையாடுகிறார். மேலும் அவருக்கு வேகப் பந்து வீச்சை சந்தித்து விளையாடுவதில் வெளிப்படையாகவே பிரச்சனைகள் இருக்கிறது.

அதே சமயத்தில் அவர் சுழல் பந்துவீச்சை கொஞ்சம் திறமையாக விளையாட கூடியவராக இருக்கிறார். அவர் இருக்கும் இந்த பிரச்சனை காரணமாக அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும் போட்டி நடைபெறும் லக்னோ ஏகனா மைதானத்தின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கலாம்.

- Advertisement -

இந்தப் பையனை அனுப்புங்கள்

இது குறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “இன்றைய போட்டியில் கார்த்திக் சர்மாவை நான்காவது இடத்தில் அனுப்பக்கூடாது அவருக்கு வேகப் பந்துவீச்சை எதிர்த்து விளையாடுவதில் நிறைய பிரச்சனை இருக்கிறது. அந்தப் பையனால் வேகப்பந்து வீச்சில் ரன்கள் எடுக்க முடியாது”

இதையும் படிங்க: கடைசியா சாகல் பாய் என் கையில மாட்டிக்கிட்டாரு.. ஆனா நான் என் கோச் கிட்ட சொன்னது வேற – திலக் வருமா பேட்டி

“எனவே நான்காவது இடத்தில் பிரிவியசை களம் இறக்க வேண்டும். அவரால்தான் அடித்து விளையாடி ரன்கள் கொண்டுவர முடியும். தற்போது ஜேமி ஓவர்டன் இல்லாத காரணத்தினால் ஸ்பென்சர் ஜான்சன் விளையாட வேண்டும். இல்லையென்றால் குல்ஜப் விளையாடலாம். ஆனால் ஜான்சன்தான் சரியானவர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -