மும்பை செய்த உதவியை சிஎஸ்கே வீணடிச்சிருக்கு.. பிளமிங் தொடர்ந்து மோசமான தப்பையே பண்றாரு – பத்ரிநாத் விமர்சனம்

0
84
CSK

நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் தேர்வு மிகவும் மோசமாக இருந்துள்ளதாக சுப்ரமணியம் பத்ரிநாத் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் மூன்று இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். மூவரும் ஒரே மாதிரி பந்து வீசக்கூடியவர்கள். மேலும் அணியின் துருப்பு சீட்டான அகெல் உசைன் சேர்க்கப்படவில்லை.

- Advertisement -

இது மோசமாக உள்ளது

இது குறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசும்போது “இந்தத் தொடர் கொடுக்கவே சிஎஸ்கே வின் அணி தேர்வு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்த போட்டியில் உசைன் விளையாடி இருக்க வேண்டும். அவர் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்று இருக்கிறது. நேற்று குல்ஜப் விளையாடி இருக்கக் கூடாது”

“நேற்று ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் சாதகம் கொடுத்த போதிலும் கூட நீங்கள் உங்களுடைய பிரதான சுழல் பந்துவீச்சாளரை விளையாடி இருக்க வேண்டும். ஏனென்றால் ஸ்கொயர் மிகவும் தூரமாக இருந்தது. இதை அவரால் பயன்படுத்தி இருக்க முடியும்”

- Advertisement -

எல்எஸ்ஜி சிறப்பாக இருந்தது

“இந்த ஆடுகளத்தில் எல்எஸ்ஜி பந்துவீச்சு வரிசை மிகவும் சிறப்பாக இருந்தது. மும்பை பஞ்சாப்பை வீழ்த்தி சிஎஸ்கேவுக்கு உதவி செய்திருந்தது. ஆனால் நேற்று மார்ஸ் பந்தை அடித்து நொறுக்கும் போது வலுவற்றவர்களாக சிஎஸ்கே பவுலர்கள் இருந்தார்கள். மும்பை கொடுத்த முன்னிலையை சிஎஸ்கேவால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை”

இதையும் படிங்க : கோயங்கா அவர்களே.. ரிஷப் பண்டிற்கு அந்த தப்பை பண்ணிடாதீங்க.. உங்க டீம் நாசமாயிடும் – சேவாக் எச்சரிக்கை

“எல்எஸ்ஜி அணியின் சீம் மற்றும் வேகம் என எல்லாமே மிகச் சிறப்பாக இருந்தது. சிஎஸ்கே அணியில் மூன்று இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். அவர்கள் மூவருமே ஒரே மாதிரி பந்து வீசக்கூடியவர்கள். அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. அணித் தேர்வு மிக மோசம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -