சூர்யா அந்த வேலையை செமி பைனல்ல பாத்துக்கலாம்.. வெஸ்ட் இண்டிஸ் கிட்ட அந்த பிளேயரை நம்ப வேணாம் – ஸ்ரீகாந்த் எச்சரிக்கை

0
11
Srikanth

இந்திய அணி அடுத்து வாழ்வா சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் கேப்டன் சூரியகுமார் ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

தற்போது இந்திய அணி இரண்டு போட்டிகளில் வென்றால் செமி பைனலுக்கு செல்ல முடியும் என்கின்ற சூழ்நிலை காணப்பட்டது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணியை இந்திய அணி வென்றது. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி மிக முக்கியமானது.

- Advertisement -

இந்திய அணியின் திடீர் பிரச்சனை

தற்போது இந்திய அணிக்கு பவுலிங் யூனிட்டில் 8 ஓவர்களை அக்சர் படேல் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே மூவரும் இணைந்து வீச வேண்டிய சூழல் உள்ளது. இதில் அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டுமே ஈசி முடிக்கவும் சில நேரங்களில் வாய்ப்புகள் உண்டு.

நேற்றைய போட்டியில் சிவம் துபே இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீசி ஒரு விக்கெட் கைப்பற்றி 46 ரன்கள் கொடுத்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு ஓவர்களுக்கு மிக அதிக ரன் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையையும் படைத்தார்.

- Advertisement -

ஸ்ரீகாந்த் அறிவுரை

இது குறித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “எனக்கு இந்திய அணியின் பந்துவீச்சு கவலை அளிப்பதாக இல்லை. ஏனென்றால் கடந்த போட்டியில் பேட்டிங் செய்வதற்கு மிக சாதகமான ஆடுகளம் கொடுக்கப்பட்டது. என் கவலை ஆறாவது பவுலர் யார் என்பதுதான். துபே போல யாரும் வந்து வீசி நான் பார்க்கவில்லை. அவர் ஆடுகளத்தை விட்டு வெளியில் வீசுகிறார்”

இதையும் படிங்க : சஞ்சு கிட்ட எனக்கு பெரிய பிரச்சனையே இதுதான்.. இந்த ரெண்டு விஷயத்துல ஒன்னையாவது அவர் செய்யணும் –

” தற்போது இந்திய அணியில் உள்ள பிரதான 4 பவுலர்களும் சிறப்பான நிலையில் பந்து வீசுகிறார்கள். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமானது. இந்தப் போட்டியில் சூரியகுமார் யாதவ் ஆறாவது பவுலரை பந்து வீச வைக்க கூடாது. தேவைப்பட்டால் அரை இறுதிக்கு சென்று விட்டு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -