நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக இருந்து வரும் ஹர்திக் பாண்டியா முடிவுகள் எடுப்பதில் மிகவும் பயப்படுகிறார் என ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மேலும் இந்த தொடரில் ஒன்பது போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
ஹர்திக் பாண்டியா பயப்படுகிறார்
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மற்றும் பேட்ஸ்மேனாக ஹர்திக் பாண்டியா தொடர்ந்து தடுமாறி வருகிறார். பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் அவரது முடிவுகள் மிகவும் மோசமான முறையில் அமைந்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “ஹர்திக் பாண்டியாவால் பந்தை சரியாக அடிக்க முடியவில்லை. அவர் பந்து வீசவும் பயந்து கொள்கிறார். பவர் பிளேவில் அவர் பந்து வீசுவதற்கு பதிலாக பகத்திடம் பந்து வீசக் கொடுக்கிறார். அவரை எல்லோரும் அடித்து நொறுக்குகிறார்கள். ஹர்திக் பாண்டியா பவர் பிளேவில் வர பயப்படுகிறார்”
இது கட்டம் கட்டி விடுவார்கள்
“ஹார்திக் பாண்டியாவுக்கு ஒரு கேப்டனாக மிடில் மற்றும் டெத் ஓவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற எந்த யோசனையும் இல்லை. அவர் களத்தில் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்று புரியவே இல்லை. இனிமேல் அவருக்கு எல்லோரும் உடல் நோக்கி பந்து வீசுவார்கள். அவரால் அசையவே முடியாது. கட்டம் கட்டி விடுவார்கள்”
இதையும் படிங்க : கார்த்திக் சர்மா கிட்ட இருந்து இன்னும் நிறைய வரும்.. அகேல் ஹூசைனை ஆடாத காரணம் இதுதான் – ருதுராஜ் பேட்டி
“திலக் வர்மா பந்தை அடிக்க திணறுகிறார். அவர் இந்த தொடரில் சதம் அடித்த ஒரு போட்டியில் மட்டுமே சரியாக விளையாடியிருக்கிறார். ஒரு வெயில் நாள் மட்டுமே ஒரு முழு கோடை காலம் ஆகிவிடாது. எனவே அவரை தூக்கி விட்டு வேறு யாரையாவது கொண்டு வர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






