கார்த்திக் சர்மா கிட்ட இருந்து இன்னும் நிறைய வரும்.. அகேல் ஹூசைனை ஆடாத காரணம் இதுதான் – ருதுராஜ் பேட்டி

0
21
Ruturaj

நேற்று ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இது தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணிக்கு ருத்ராஜ் மற்றும் கார்த்திக் சர்மா இருவரும் அரை சதங்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் 75 பந்தில் 98 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

சிஎஸ்கே மாற்றங்கள்

நேற்று சிஎஸ்கே கார்த்திக் சர்மா பிரசாந்த் வீர் மற்றும் ராமகிருஷ்ணா கோஸ் என மூன்று புதிய வீரர்களையும் களம் இறக்கி விட்டது. அனுபவ வீரர்கள் அகேல் ஹுசைன் மற்றும் சர்பராஸ் தான் இருவரையுமே களம் இறக்கவில்லை.

தற்போது ஐபிஎல் தொடர் பாதியை தாண்டிவிட்டது. இங்கிருந்து சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் கூட போகும். எனவே அடுத்த சீசனுக்காக முன்கூட்டியே இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே வாய்ப்பு கொடுத்திருப்பதாக தெரிகிறது. நேற்று இந்த முடிவு நன்றாகவே பலன் கொடுத்தது.

- Advertisement -

இவர் சிறப்பாக வருவார்

இதுகுறித்து ருதுராஜ் பேசும்போது “நாங்கள் போட்டியை சிறப்பாக தொடங்கினோம். பிறகு அவர்கள் ஆட்டத்தை அவர்கள் பக்கம் எடுத்தார்கள். பின்பு நாங்கள் மீண்டும் அவர்களை கட்டுப்படுத்தினோம். இதனால் 20 முதல் 30 ரன்கள் குறைவாக எங்களுக்கு கிடைத்தது. ஒரு பவுலராக காம்போஜ் நிறைய புதிய விஷயங்களை கற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார்”

இதையும் படிங்க : எங்களை விட சிஎஸ்கே தான் நல்ல அணி.. அவர்களை அவுட் பண்ண தீப்பந்துகளையா எறிய முடியும் – ஹர்திக் பாண்டியா பேட்டி

“எங்கள் அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக உள்ளார்கள். எனவே அவர்களுக்கு நாங்கள் வாய்ப்பு தர வேண்டும் என்று விரும்பினோம். கார்த்திக் சர்மாவுக்கு இப்பொழுது நம்பிக்கை அதிகரித்திருக்கும். அவர் ஸ்பின் மற்றும் பாஸ்ட் என இரண்டுக்குமே நன்றாக ஆடுகிறார். அவர் ஒரு முறை செட் ஆகிவிட்டால் வரும் ஆண்டில் இன்னும் நிறைய ரன் கொடுப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -