நடப்பு 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது யாருக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கணிப்பை கூறியிருக்கிறார்.
இந்த முறை இந்திய அணி t20 உலகக் கோப்பையை வென்றால் இந்திய வீரர்களில் யாருக்காவது தொடர் நாயகன் விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதுவரையில் இந்திய வீரர்கள் அதற்கான போட்டியில் இருப்பதாக தெரியவில்லை.
பாகிஸ்தானுக்கு கூட வாய்ப்பு
இதுவரை டி20 உலகக் கோப்பை தொடரில் 2016ஆம் ஆண்டு 319 ரன்கள் மொத்தமாக எடுத்து அதிக ரன் எடுத்தவராக விராட் கோலி சாதனை படைத்தார். இந்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் அதை பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் பர்கான் முறியடித்திருக்கிறார்.
இன்னொரு பக்கத்தில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம், நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், வெஸ்ட் இண்டீஸ் சிம்ரன் ஹெட்மையர், இங்கிலாந்தின் வில் ஜேக்ஸ், இன்னொரு தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி நெகிடி ஆகியோர் சிறப்பான முறையில் இந்த தொடரில் விளையாடுகிறார்கள்.
இவர்களுக்குத்தான் கிடைக்கும்
இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது ” தற்போது இதற்கான போட்டி உண்மையில் இரண்டு வீரர்களுக்கு இடையில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருவர் தென் ஆப்ரிக்கா கேப்டன் மார்க்ரம் மற்றும் இன்னொருவர் இங்கிலாந்தின் ஸ்பின் ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ். இவர்கள் இருவரில் ஒருவருக்கு கிடைக்கவே வாய்ப்புள்ளது”
இதையும் படிங்க : சாம்சன் மோசமான டெக்னிக் பிரச்சினையை வச்சிருக்காரு.. சின்ன வயசுல கத்துக்கிட்டத கூட செய்யல – பத்ரிநாத் விமர்சனம்
“இவர்களைத் தவிர ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி வருண் சக்கரவர்த்திக்கு கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது. அடுத்து லுங்கி நெகிடி மற்றும் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் இவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் அணி இறுதிப் போட்டிக்கு வந்து இவர்கள் சிறப்பாக செயல்பட்டால் வாய்ப்புகள் உண்டு” என்று கூறியிருக்கிறார்.






