ஹெட் அபிஷேக் செய்வது பைத்தியக்காரத்தனமானது.. இன்னும் எத்தனை நாளைக்கு ரெண்டு பேரும் தப்பிப்பீங்க? – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
55
Abhishek

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் பொறுப்பில்லாமல் விளையாடுவதாக ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று குஜராத் அணிக்கு எதிராக பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஹைதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடும் முற்பட்டு 86 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனார்கள். மேலும் 82 ரன் வித்தியாசத்தில் தோற்றார்கள்.

- Advertisement -

பெரிய பிரச்சனை

பொதுவாக அபிஷேக் ஷர்மா பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் மட்டுமே மிகவும் அதிரடியாக விளையாடுகிறார். பந்து வீச்சிக்கு கொஞ்சம் சாதகம் இருந்தாலும் அவர் வெகு எளிதாக தனது வெட்கட்டை இழந்து விடுகிறார்.

மேலும் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அவர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர்களை விளையாடவே அவர் மிகவும் சிரமப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது சரிவராது

இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது ” அபிஷேக் தன்னுடைய முதல் பந்தையை சிக்ஸர் அடித்தார். ஆனால் அவர் அடுத்த பந்தையும் அப்படியே அடிப்பதற்கு ஏன் செல்ல வேண்டும்? மிக முக்கியமாக மோசமாக முயற்சி செய்து நான்காவது பந்தில் அவர் மீண்டும் ஆட்டம் இழந்து விட்டார். ஆடுகளத்தில் விஷயம் இருக்கும்போது நீங்கள் கொஞ்சமாவது புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். நீங்கள் அர்ப்பணிப்புடன் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க : அபிஷேக் பண்றது டிராபிக்ல தப்பு.. பையன் மாட்டிக்குவான்.. கில்தான் கரெக்டான ஆளு.. – அஸ்வின் விமர்சனம்

“ஹெட் இந்த தொடர் முழுவதும் பந்தை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார். அவர் இதுவரையில் எடுத்துள்ள ரன்கள் அதிர்ஷ்டத்தின் காரணமாகத்தான் எடுத்திருக்கிறார். ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று தெரிந்தும் கூட அவர் விளையாடிய விதம் மிகவும் மோசமானது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -