அபிஷேக் பண்றது டிராபிக்ல தப்பு.. பையன் மாட்டிக்குவான்.. கில்தான் கரெக்டான ஆளு.. – அஸ்வின் விமர்சனம்

0
40
Ashwin

இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பொறுப்பில்லாமல் விளையாடி தொடர்ந்து விக்கெட்டை இழந்து வருவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ரபாடா பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் அடித்து விட்டு அடுத்த பந்தில் போல்டாகி அபிஷேக் சர்மா வெளியேறினார். அவரிடம் நிலைத்தன்மையான ஆட்டத்தை பார்க்க முடியவில்லை.

- Advertisement -

டி20 எதிர்காலம்

தற்போது வைபவ் சூரியவன்சி அனைவரையும் ஈர்த்த வீரராக இருக்கிறார். எனவே அவர் இந்திய டி20 அணியில் சீக்கிரத்தில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. அவரிடம் பெற்றால் சஞ்சு சாம்சன் இல்லை அபிஷேக் சர்மா தங்களுடைய இடத்தை இழக்க வேண்டியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வைபவ் சூரியவன்சி ஆடுகளத்திற்கு தகுந்தது போல் தன்னை இந்த வயதிலேயே மாற்றிக் கொள்ளக் கூடியவராக இருக்கிறார். ஆனால் ஆடுகளத்தில் பந்துவீச்சுக்கு கொஞ்சம் சாதகம் இருந்தால் அபிஷேக் சர்மாவால் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அபிஷேக் செய்வது சரியில்லை

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “தற்போது டி20 கிரிக்கெட் மாறிவிட்டது என்பது உண்மை. அபிஷேக் அதிரடியான விளையாடி தான் இந்திய அணியில் இடம் பிடித்தார். நாளை இதுபோன்று பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளம் கொடுக்கப்பட்டால் கில் மற்றும் சாய் சுதர்சன்தான் தேவையாக இருப்பார்கள். இத்தோடு சேர்த்து கொஞ்சம் சுழல் பந்துவீச்சுக்கும் சாதகத்தை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் அபிஷேக் சர்மா நிற்க முடியாது”

இதையும் படிங்க: பும்ராவுக்கு அப்ப 16 வயசு.. நான் கேன்சரில் இருந்து திரும்ப வந்த சமயம்.. அப்பவே என்னை மிரட்டினார் – யுவராஜ் சிங் பேட்டி

“நீங்கள் அதி வேகமாக 200 கிலோ மீட்டர்கள் கூட வண்டி ஓட்டுங்கள். ஆனால் அதை டிராபிக் ஜாம் இருக்கும்போது உங்களால் செய்ய முடியாது. அப்படி செய்தால் விளைவு மோசமாக இருக்கும். என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியும். நேற்று ரபாடா பந்துவீச்சு ஒரு சிக்ஸர் அடித்து விட்டு ஆடுகளத்தை பற்றி கவலை இல்லாமல் விளையாடி தான் விக்கெட்டை இழந்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -