நியூசி டெஸ்ட்.. இலங்கை அணி ரன் குவிப்பு.. கமிந்து மெண்டிஸ் அபார சதம்.. இந்திய அணிக்கு சாதகம்.. முதல் நாள் முடிவுகள்

0
231
Kamindu

நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இன்று துவங்கிய முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. கமிந்து மெண்டிஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மேலும் அடுத்து இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இலங்கை அணி வெல்வது இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்வதில் சிரமங்களை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிறப்பாக ஆரம்பித்த இலங்கை

இன்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷாங்கா 27, முன்னாள் கேப்டன் திமோத் கருணரத்தினே 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத்தொடர்ந்து வந்த அனுபவ வீரர்களான விக்கெட் கீப்பர் தினேஷ் சந்திமல் 71 பந்துகளில் 30 ரன்கள் மற்றும் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 116 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்கள். ஓரளவுக்கு சிறப்பான துவக்கத்தை இலங்கை அணி பெற்ற பொழுதிலும் கூட நான்கு முக்கிய விக்கெட்டுகளை சீக்கிரத்தில் எழுந்து சிறிய நெருக்கடியில் சிக்கியது.

- Advertisement -

கலக்கிய மெண்டிஸ்கள்

இந்த நிலையில் கமிந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் இணைந்து இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டு காப்பாற்றினார்கள். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி அதிரடியாக 137 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய குசால் மெண்டிஸ் துரதிஷ்டவசமாக 68 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் சதம் அடித்தார். முதல் 11 இன்னிங்ஸ்களில் அவர் அடித்த நான்காவது டெஸ்ட் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலங்கை அணி வலிமையாக இருந்தபோது கடைசி நேரத்தில் கமிந்து மெண்டிஸ் 173 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையும் படிங்க: ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்ப வருவாரா?.. கம்பீர் கொடுத்த நெத்தியடி பதில்

இன்று இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 87 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்து இருக்கிறது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 3, கிளன் பிலிப்ஸ் 2, டிம் சவுதி 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -