வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. தற்பொழுது இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கு இலங்கை அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா தற்பொழுது முழு நேர பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இந்திய அணிக்கு எதிராக 27 வருடங்கள் கழித்து ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சமீபத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை தோற்று மூன்றாவது போட்டியை அதிரடியாக வென்றது.
மேலும் இதைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. இந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக இலங்கை அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இரண்டு போட்டிகளையும் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. தற்போது இலங்கை புதிய நம்பிக்கையான அணியாக காணப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி அக்டோபர் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் டி20 தொடரிலும், அக்டோபர் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக இலங்கையில் விளையாடுகிறது. தற்பொழுது இதற்கு 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தொடர்களுக்கு இலங்கையின் கேப்டனாக சரித் அசலங்கா தொடர்கிறார். மேலும் பனுகா ராஜபக்ச மீண்டும் வருகிறார். ஹசரங்கா, தீக்சனா மற்றும் பதிரனா போன்ற இளம் வீரர்களும் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : பாக் தார் ரோடு பிட்ச்.. ஜெயிக்க வழி என்ன.. டெஸ்ட் கிரிக்கெட் அவ்வளவுதான் – அஸ்வின் பீட்டர்சன் விமர்சனம்
வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான இலங்கை அணி :
சரித் அசலங்க (கே), பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, ஜெப்ரி வான்டர்சே, சமிந்து, விக்ரம துஷார, சமிந்து, விக்ரம துஷார, பெர்னாண்டோ மற்றும் அசித பெர்னாண்டோ.